வீடியோ: சம்பவம்னா இதான்டா.. மின்னல்வேக ஸ்டம்பிங் செய்து மிரட்டிய அறிமுக வீரர் பரத்: ஜடேஜாவின் மாயாஜாலத்தில் ஆஸி., சரண்டர்! 1

ஜடேஜாவின் மாயாஜால சூழலில் ஸ்டம்பிங் ஆனார் மார்னஸ் லபுச்சானே. அறிமுக வீரர் பரத் சிறப்பான சம்பவத்தின் வீடியோ இங்கே உள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியை கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

வீடியோ: சம்பவம்னா இதான்டா.. மின்னல்வேக ஸ்டம்பிங் செய்து மிரட்டிய அறிமுக வீரர் பரத்: ஜடேஜாவின் மாயாஜாலத்தில் ஆஸி., சரண்டர்! 2

 

ஆஸ்திரேலியா ஓப்பனிங் பேட்ஸ்மேன் உஸ்மான் கவஜா மற்றும் டேவிட் வார்னர் இருவரும் சிராஜ் மற்றும் சமி பந்துகளில் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டம் இழந்தனர். மார்னஸ் லபுச்சானே மற்றும் ஸ்மித் இருவரும் மூன்றாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தது.

ஸ்மித்-லபுச்சானே ஜோடி இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருந்து விடுவார்களோ என்ற சந்தேகங்கள் நிலவி வந்தது. அந்த சமயத்தில் 49 ரன்களில் இருந்த லபுச்சானே, ரவீந்திர ஜடேஜாவின் மாயாஜால சூழலில் இறங்கி அடிக்க முயற்சித்தபோது பந்தை தவறவிட, அதை அடுத்த நொடியே பிடித்து ஸ்டம்ப்பிங் செய்தார் அறிமுக வீரர் கே எஸ் பரத்.

வீடியோ: சம்பவம்னா இதான்டா.. மின்னல்வேக ஸ்டம்பிங் செய்து மிரட்டிய அறிமுக வீரர் பரத்: ஜடேஜாவின் மாயாஜாலத்தில் ஆஸி., சரண்டர்! 3

அதன்பிறகு இந்திய அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றியது. அந்த இரண்டையும் ஜடேஜா கைப்பற்றினார். ஸ்டீவ் ஸ்மித் 37 ரன்களுக்கும் மேட் ரென்ஷா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டம் இழக்க ஆஸ்திரேலியா அணி 109 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

தற்போது களத்தில் பீட்டர் ஹேன்ஸ்கோம் மற்றும் அலெக்ஸ் கேரி இருவரும் ஆஸ்திரேலியா அணியை சரிவிலிருந்து மீட்டு வருகின்றனர். 50 ஓவர்களில் 144 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது. ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகளும், சமி மற்றும் சிராஜ் இருவரும் தலா ஒரு விக்கட்டும் வீழ்த்தியுள்ளனர்.

வீடியோ: சம்பவம்னா இதான்டா.. மின்னல்வேக ஸ்டம்பிங் செய்து மிரட்டிய அறிமுக வீரர் பரத்: ஜடேஜாவின் மாயாஜாலத்தில் ஆஸி., சரண்டர்! 4

கேஎஸ் பரத் செய்த சம்பவத்தின் வீடியோ:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *