இஷான் கிஷன் அறிமுகமான போட்டியில் ஒரு ரன் மட்டுமே அடிக்கவிட்டு டிக்ளேர் செய்தார் ரோகித் சர்மா. எதற்காக இப்படி செய்தார்? மற்றும் டிக்ளர் செய்யும் முன்பு கடுமையாக கோபப்பட்டது ஏன்? என்பது குறித்து பின்வருமாறு காண்போம்.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 150 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது இந்திய அணி. அதன் பிறகு இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் பேட்டிங் இறங்கினார்.
ரோகித் மற்றும் ஜெய்ஸ்வால் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 229 ரன்கள் குவித்தது. இதில் கேப்டன் ரோகித் சர்மா பத்தாவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்து 103 ரன்களுக்கு அவுட் ஆனார். அபாரமாக ஆடிவந்த ஜெய்ஸ்வால் சதம் கடந்தார்.
இரண்டாம் நாள் முடிவில் 143 ரன்கள் அடித்திருந்த ஜெய்ஸ்வால் மூன்றாம் நாளில் 150 ரன்கள் கடந்து 171 ரன்கள் அடித்து அவுட் ஆனார். இதன் மூலம் பல்வேறு சாதனைகளையும் படைத்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர் விராட் கோலி 76 ரன்கள் மற்றும் ஜடேஜா 37 ரன்கள் அடித்துக் கொடுக்க, ஜெய்ஸ்வால் உடன் சேர்ந்து இந்த போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான இஷான் கிஷன் ஒரு ரன் மட்டுமே அடித்திருந்தபோது டிக்ளர் செய்யப்பட்டது. இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 421 விரன்களை முதல் இன்னிங்சில் குவித்தது.
மீதம் இரண்டு நாட்கள் இருந்தும் இஷான் கிஷன் தன்னுடைய அறிமுக போட்டியில் ஒரு ரன் அடித்ததுமே கோபத்துடன் டிக்ளர் செய்து உள்ளே வர சொன்னார் ரோகித் சர்மா. இதற்கான காரணங்கள் என்னவென்று பார்த்தபோது, இஷான் கிஷன் பேட்டிங் றங்குவதற்கு முன்னரே ரோகித் சர்மா டிக்ளேர் செய்யலாம் என்கிற முடிவில் இருந்திருக்கிறார். ஆனால் அறிமுக போட்டி என்பதால் பேட்டிங் இறங்கினால் ஒரு நம்பிக்கை பிறக்கும் என்பதற்காகவே இஷான் கிஷன் பேட்டிங் செய்ய வைக்கப்பட்டிருக்கிறார்.
1 ரன் அடித்தால் டிக்ளேர் செய்யலாம் என்று எதிர்பார்த்திருந்தபோது, தொடர்ந்து 19 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் தடுப்பாட்டம் ஆடிக் கொண்டிருந்தார் இஷான் கிஷன். இதனால் சற்று கோபப்பட்ட ரோகித் சர்மா, வெளியில் இருந்து விரைவாக ஒரு ரன் அடிக்கும்படியும் அறிவுரை கூறினார். அடித்தவுடன் டிக்ளரும் செய்திருக்கிறார்.
இந்த நிகழ்வின் வீடியோவை கீழே பார்க்கலாம்.
— Nihari Korma (@NihariVsKorma) July 15, 2023