வீடியோ; ஆரோன் பின்ச்சின் ஸ்டெம்ப்பை தெறிக்கவிட்ட இஷாந்த் சர்மா
இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆரோன் பின்ச்சை இந்திய வீரர் இஷாந்த் சர்மா தனது துல்லியமான பந்துவீச்சு மூலம் வெளியேற்றி அசத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகளில் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி அடிலெய்ட்டில் நேற்று துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
நேற்று தொடங்கிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, புஜாராவின் அபார சதத்தால் 250 ரன்களை சேர்த்தது.
முதல் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 87.5 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்களை சேர்த்திருந்தது. இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியதும் ஹேசில்வுட் வீசிய முதல் பந்திலேயே ஷமி அவுட்டானதால் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிந்தது.
Not the start Australia wanted, but what a photo! #AUSvIND
?: AAP | David Mariuz pic.twitter.com/0NvGXYXRRo
— cricket.com.au (@cricketcomau) December 7, 2018
இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. ஃபின்ச் மற்றும் அறிமுக வீரர் மார்கஸ் ஹாரிஸ் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய இஷாந்த் சர்மா, மூன்றாவது பந்திலேயே ஃபின்ச்சை கிளீன் போல்டாக்கி வெளியேற்றினார். ஃபின்ச் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
பின்னர் மார்கஸ் ஹாரிஸுடன் ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் உஸ்மான் கவாஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முடிந்தவரை விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் ஆட முயன்றது. ஆனால் அஷ்வின் அந்த ஜோடியை பிரித்தார். மார்க்ஸ் ஹாரிஸை 26 ரன்களில் வெளியேற்றிய அஷ்வின், ஷான் மார்ஷை 2 ரன்னில் கிளீன் போல்டாக்கி அனுப்பினார்.
The stumps went flying as Ishant Sharma gave India the perfect start with the ball.#AUSvIND | @bet365_aus pic.twitter.com/f7bg9MPGWd
— cricket.com.au (@cricketcomau) December 7, 2018
இதையடுத்து அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்து ஆடிவருகிறது. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் உஸ்மான் கவாஜா மிகவும் நிதானமாக ஆடிவருகிறார். 100க்கும் அதிகமான பந்துகளை எதிர்கொண்டு இருபதுகளில் தான் ரன்களை எடுத்துள்ளார் கவாஜா. அந்தளவிற்கு நிதானமாக ஆடிவருகிறார். விக்கெட்டை இழந்துவிடாமல் ஹேண்ட்ஸ்கோம்புடன் பார்ட்னர்ஷிப் அமைத்து வருகிறார்.