பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல் நாளை முடித்துவிட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் ஈடுபட்ட இசாந்த் சர்மா நிருபரின் கேள்விக்கு கலகலவென பதிலளித்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் வங்கதேசத்தை துவம்சம் செய்து இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர்.

அதேபோல் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் வங்கதேச வீரர்கள் வந்த வேகத்திலேயே மீண்டும் பெவிலியனுக்கு திரும்பினர்.
இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுக்களையும் இருந்த வங்கதேச அணி 106 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக சத்மான் 29 ரன்களும், லிட்டன் தாஸ் 24 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய இசாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவருக்கு பக்கபலமாக இருந்த உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், வேகத்தில் அசத்திய சமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முதல் நாள் ஆட்டம் முடிந்த பிறகு, இந்திய வரலாற்றில் பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய இசாந்த் சர்மா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்றார்.
அப்போது நிருபர் ஒருவர் காரசாரமான கேள்விகளுக்கு நடுவே, “இரவு நேரங்களில் பிங்க் நிறப்பந்து பேட்ஸ்மேனுக்கு தெரிகிறதா?” என கேள்வியை கேட்க, அதற்கு கலகலப்பான பதிலளித்தார் இசாந்த் சர்மா.
View this post on InstagramA post shared by ESPNcricinfo (@espncricinfo) on
அவர் அளித்த பதிலாவது:
“நிச்சயமாக.. அனைத்து விளக்குகளும் எரிய விடப்பட்டிருக்கும். அந்த வெளிச்சத்தில் பந்து நிச்சயம் தெரியும். அதில் எந்த சந்தேகமும் இல்லை” என்றார். இவரின் இந்த பதிலுக்கு அரங்கமே சிறிதுநேரம் கலகலப்பில் நிறைந்திருந்தது.