தற்போது இந்திய அணி இலங்கைக்கு சென்று டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று, இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக விளையாடி வருகிறது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் முடிவில் இலங்கை அணி 50 விக்கெட் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 183 ரன்னுக்கு சுருண்டது.
மூன்றாவது நாளை தொடங்கிய தினேஷ் சந்திமால் மற்றும் குஷால் மெண்டிஸ் ஆகியோர் ஆரம்பத்திலேயே தனது விக்கெட்டை இழந்தனர். இதனால், இலங்கை ரசிகர்கள் அனைவரும் ஏஞ்சலோ மத்தியூஸை நம்பியிருந்தனர்.
சிறிது நேரம் தாக்குப்பிடித்து மத்தியூஸ் 34வது ஓவரில் அஷ்வினிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஏற்கனவே ஒரு விக்கெட்டை எடுத்த ஜடேஜா, தனஞ்செயா டி சில்வாவை வந்த வேகத்தில் பெவிலியனுக்கு அனுப்பினார். அந்த விக்கெட் தான் அவரின் 150வது டெஸ்ட் விக்கெட் ஆகும்.