வீடியோ : ஒற்றை கையில் ஸ்டெம்புகளை தெறிவிட்டு ரன் அவுட் செய்த ஜடேஜா ! 1

சிஎஸ்கே ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா கெயில் அடித்த பந்தை விரைவில் எடுத்து ஒற்றை கையில் ஸ்டெம்பை நோக்கி அடித்து கே எல் ராகுலை ரன் அவுட் செய்துள்ளார். இந்த வீடியோ சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது. 14வது ஐபிஎல் சீசன் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை 7 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இரண்டு வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.

8வது லீக் போட்டியில் சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டி முப்பை வாங்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

வீடியோ : ஒற்றை கையில் ஸ்டெம்புகளை தெறிவிட்டு ரன் அவுட் செய்த ஜடேஜா ! 2

அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி சிஎஸ்கே பவுலர் தீபக் சஹாரின் பந்தை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டை இழந்துள்ளனர். தனது முதல் ஓவரின் 4வது பந்தை வீசிய தீபக் சஹார் மயங்க் அகர்வாலின் ஸ்டெம்புகளை தெறிக்கவிட்டார்.

இதில் பார்முக்கு வந்த தீபக் சஹார் கிறிஸ் கெயில், தீபக் ஹுடா மற்றும் நிக்கோலஸ் பூரான் விக்கெட்களை வீழீத்திஅசத்தினார். தற்போது தீபக் சஹார் மயங்க் அகர்வால் விக்கெட் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. இதையடுத்து சிஎஸ்கே ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா கெயில் அடித்த பந்தை விரைவில் எடுத்து ஒற்றை கையில் ஸ்டெம்பை நோக்கி அடித்து கே எல் ராகுலை ரன் அவுட் செய்துள்ளார். இந்த வீடியோ சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *