தனது பவுலிங் ஆக்சனை மாற்றியுள்ள பும்ராஹ்; முதன்முறையாக வெளிவந்த வீடியோ! 1

தனது பவுலிங் ஆக்சனை மாற்றியுள்ள பும்ராஹ்; முதன்முறையாக வெளிவந்த வீடியோ!

இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர்களைப் போலவே பந்துவீசி காட்டிய ஜஸ்பிரித் பும்ரா வீடியோ வெளியிட்டுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

ஐபிஎல் தொடருக்கு இன்னும் இரண்டு வார காலங்களுக்கும் குறைவாகவே இருக்கும் காரணத்தினால் அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். சென்னை அணியில் சில வீரர்களுக்கு கொரோனா இருந்ததால் அவர்களால் இயல்புநிலை பயிற்சிக்கு முதலில் திரும்ப முடியவில்லை. பின்னர் அவர்களுக்கு கொரோனா இல்லை என தெரியவந்ததால் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதியில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் இயல்புநிலை பயிற்சிக்கு திரும்பிவிட்டனர்.

தனது பவுலிங் ஆக்சனை மாற்றியுள்ள பும்ராஹ்; முதன்முறையாக வெளிவந்த வீடியோ! 2

ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ பதிவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டி வருகின்றன.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் பயிற்சி செய்யும் வீடியோ பதிவை அதன் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட போது, அதில் மும்பை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனது இயல்பான பௌலிங் ஆக்சன் போலல்லாமல் இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர்களைப் போலவே செய்து காட்டினார்.

தனது பவுலிங் ஆக்சனை மாற்றியுள்ள பும்ராஹ்; முதன்முறையாக வெளிவந்த வீடியோ! 3

உதாரணமாக அனில் கும்ப்ளே, ஷென் வார்னே, கேதர் ஜாதவ் ஆகியோரை போலவே அச்சுஅசலாகவே பந்திவீசி அசத்தினார்.

ஐபிஎல் தொடரை பொறுத்தவரை இந்த ஆண்டு யார் யார் கோப்பையை வெல்வார்கள் என்று தற்போது இருந்தே கணிப்புகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில், மும்பை அணியில் பெஸ்ட் பினிஷர்கள் இருக்கிறார்கள். அவர்களால் நிச்சயம் கோப்பையை வெல்ல முடியும். என கணித்திருந்தார்.

தனது பவுலிங் ஆக்சனை மாற்றியுள்ள பும்ராஹ்; முதன்முறையாக வெளிவந்த வீடியோ! 4

அதேநேரம் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக், “இந்த வருடம் ஐபிஎல் கோப்பையை பெங்களூரு அணி வெல்லும். ஒருவேளை பெங்களூரு அணி தவறவிட்டால் மும்பை  வெல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றனர். ஆஸ்திரேலிய அணியின் மற்றொரு பந்துவீச்சாளரான ஷான் டெய்ட் கூறுகையில், இந்த வருடம் மும்பை அணிக்குதான் கோப்பை என ஆணித்தனமாக தெரிவித்திருந்தார்.

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *