ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஜானேவை தனது சிறப்பான பந்துவீச்சில் போல்டு செய்து வெளியேற்றியுள்ளார் முகமது ஷமி.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. டிராவிஸ் ஹெட் மற்றும் கவாஜா இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.
அபாரமாக பேட்டிங் செய்து வந்த டிராவிஸ் ஹெட் 32 ரன்களுக்கு அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்தார். அதற்கு அடுத்ததாக உள்ளே வந்த மார்னஸ் லபுஜானே களமிறங்கியதில் இருந்தே தட்டு தடுமாறி இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொண்டார். இவர் 3 ரன்களில் இருந்தபோது, ஷமி வீசிய அபாரமான பந்தில் அடிக்க முயற்சித்து இன்சைட் ஏஜ் ஆகி போல்டானார்.
அவருக்கே ஒரு நிமிடம் கதிகலங்கிப்போனது. எப்படி இது நடந்தது? நன்றாக தானே எதிர்கொண்டோம் என்று புலம்பியபடி பெவிலியன் திரும்பினார்.
மார்னஸ் லபுஜானேவை கதிகலங்க வைத்து அபாரமாக போல்ட் செய்த முகமது ஷமியின் வீடியோவை இங்கே பார்ப்போம்.
𝐓.𝐈.𝐌.𝐁.𝐄.𝐑 🔥@MdShami11 sends back Labuschagne to scalp the second wicket for #TeamIndia 👌
Follow the match ▶️ https://t.co/8DPghkx0DE#INDvAUS | @mastercardindia pic.twitter.com/LT3ao2kFBk
— BCCI (@BCCI) March 9, 2023
மறுமுனையில் துவக்க வீரர் கவாஜா இந்திய பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினார். இவருக்கு பக்கபலமாக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் விளையாட அணியின் ஸ்கோர் 100 ரன்கள் கடந்தது. ஸ்டீவ் அமித், ஜடேஜாவின் பந்தில் 38 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.
அடுத்து உள்ளே வந்த பீட்டர் ஹேன்ஸ்கோம் 17 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இந்திய அணி சார்பில் முகமது ஷமி இரண்டு விக்கெட்களும், அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
மைதானம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் நன்றாக இருப்பதால் ஆஸி., அணியினர் ஆங்காங்கே சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய பவுலர்களை திணறடித்து வருகின்றனர். ரோகித் சர்மா ஆஸ்திரேலியா வீரர்களின் விக்கெட் எடுப்பதற்கு அவ்வபோது பவுலர்களை மாற்றி மாற்றி பல திட்டங்களை முயற்சி செய்து வருகிறார்.
இருப்பினும் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து ஆஸ்திரேலியா அணி 230 ரன்கள் கடந்து விளையாடி வருகிறது. துவக்க வீரர் கவாஜா சதத்தை நெருங்கி வருகிறார். கேமரூன் கிரீன் 35 ரன்கள் கடந்து விளையாடி வருகிறார்.