அருவியில் குதுகலமாக குளியல் போடும் தல தோனி; வைரலாகும் வீடியோ !! 1
அருவியில் குதுகலமாக குளியல் போடும் தல தோனி; வைரலாகும் வீடியோ

தோனி தனது சொந்த ஊரான ராஞ்சியை சுற்றியுள்ள அருவிகளுக்கு சென்று ஆனந்த குளியல் போட்ட வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம்வந்தவர் தோனி. தோனியின் கேப்டன்சியில் இந்திய அணி, மூன்று விதமான சர்வதேச கோப்பைகளையும் வென்றது. இக்கட்டான நிலையிலும் டென்ஷனாகாமல் கூலாக அணுகும் அணுகுமுறையால் கேப்டன் கூல் என தோனி அழைக்கப்பட்டார்.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஆடிய தோனி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டதால், டெஸ்டில் ஆடவில்லை. அதனால் இங்கிலாந்திலிருந்து நாடு திரும்பிவிட்டார்.

அருவியில் குதுகலமாக குளியல் போடும் தல தோனி; வைரலாகும் வீடியோ !! 2

இந்நிலையில், தனது சொந்த ஊரான ராஞ்சியில் இருக்கும் தோனி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். ராஞ்சியை சுற்றியுள்ள அருவிகளுக்கு சென்று ஆனந்த குளியல் போட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இந்திய அணியில் இடம்பெற்ற பிறகு, அதிலும் கேப்டனான பிறகு, ஃப்ரீ டைம் அதிகமாக கிடைத்திருக்காது. தோனி டெஸ்ட் போட்டிகளில் ஆடாததால், அவருக்கு முன்பை விட நேரம் சற்று அதிகமாக கிடைத்திருக்கிறது.

அருவியில் குளிக்கும் வீடியோவை பதிவிட்டுள்ள தோனி, 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அருவிகளில் குளித்து மகிழ்வதாகவும் பழைய நல்ல நினைவுகள் எல்லாம் நினைவுக்கு வருவதாகவும் கூறியுள்ள தோனி, தனக்கே உரிய பாணியில் கிண்டலாக, ஃப்ரீ ஹெட் மசாஜ் செய்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

அருவியில் குளிக்கும் வீடியோவை பதிவிட்டுள்ள தோனி, 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அருவிகளில் குளித்து மகிழ்வதாகவும் பழைய நல்ல நினைவுகள் எல்லாம் நினைவுக்கு வருவதாகவும் கூறியுள்ள தோனி, தனக்கே உரிய பாணியில் கிண்டலாக, ஃப்ரீ ஹெட் மசாஜ் செய்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.  ரசிகர்கள் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *