சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் XI பஞ்சாப் இடையே நடந்த போட்டியில் செபாக் அரங்கில் இரண்டு அரிய காட்சிகளைக் கண்டது. இது சனிக்கிழமை (ஏப்ரல் 6) நடந்தேறியது. கேப்டன் தோனி(கேப்டன் கூல்), அசத்தலாக ரன் அவுட் செய்கையில் பந்து ஸ்டம்பிங்கில் பட்டாலும், பைல்ஸ் கீழேவிழாத காரணத்தினால் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மற்றுமொரு சம்பவமாக, 19 வது ஓவரின் முதல் பந்தை, சஹார் நிதானமின்றி தூக்கிவீச அது ஒரு இடுப்பு உயரத்தை மேலே சென்றதால் நோ பால் ஆனது. சர்ஃபராஸ் அதை பவுண்டரிக்கு விளாசினார். அதற்க்கு அடுத்த பந்தும் அதேபோல ஆக மீண்டுமொரு நோ பால். இறுதிக்கட்டத்தில் இப்படி ஒரு மோசமான பந்துவீச்சை கண்ட தோனி சஹாரிடம் ஓரிரு வார்த்தைகள் பேச, அதன்பிறகு சிறப்பாக பந்துவீசினார் சஹார்.
இங்கே வீடியோவை பாருங்கள் …
MS Dhoni schooling Deepak Chahar for his back to back no balls #CSKvKXIP #IPL2019 pic.twitter.com/iRhGQ62gib
— Deepak Raj Verma (@DRV1192) April 6, 2019
5 பந்துகளை சரியான லைனில் வீசி, ரன்களை கட்டுப்படுத்திய சஹர், 6வது பந்தில் மில்லரின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்த, இறுதி ஓவரில் பஞ்சாப் அணிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டது.
அறிமுக வீரர் குகலினுக்கு 20வது ஓவர் கொடுக்கபட்டது. மித வேகபந்து வீச்சாளர் மிக சிறப்பாக பந்துவீசி வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து ஷரஃராஸ் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இறுதியில் சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்று புள்ளிபட்டியலில் முதலிடம் பிடித்தது. சிறப்பாக பந்துவீசி முதல் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்பஜன் சிங் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்ததாக சென்னை அணி ஏப்ரல் 9ஆம் தேதி கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது.