மகேந்திர சிங் தோனி அதிக திறமைகளை கொண்ட ஒரு கிரிக்கெட் வீரர் இவர் அவர் துறைகளை மட்டும் இல்லாமல் மற்ற துறைகளிலும் அதிக ஆர்வம் காட்டுவார். இந்திய அணியை பொறுத்த வரையில் தோனி ஒரு சிறந்த கேப்டன் ஏன்னெனில் இந்திய அணிக்காக தோனி மட்டும் தான் அணைத்து ஐசிசி கோப்பையையும் வாங்கி கொடுத்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் உலகிலேயே தோனி மட்டும் தான் அனைத்து ஐசிசி கோப்பையை வென்ற ஒரே கேப்டன் ஆவார்.
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையில் 2-ஆவது ஒருநாள் போட்டி மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு முதல் சர்வதேசப் போட்டியாகும்.
இந்திய அணிக்காக அறிமுகம் ஆகும் தமிழகத்தை சேர்ந்த வாஷின்டோன் சுந்தர் தனது முதல் போட்டியில் தன் சீனியர் வீரர்களிடம் இருந்து ஐடியா கேட்க விரும்புவார். அதை போலவே போட்டியின் போது தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு இந்திய அணிக்காக கோப்பைகளை வென்று தந்த கேப்டன் மகேந்திர, விக்கெட் -கீப்பராக ஐடியா கொடுத்தார்.
Photo by Deepak Malik / BCCI / Sportzpics
முதலில் விளையாடிய இந்திய அணி ரோஹித் ஷர்மாவின் அதிரடி இரட்டை சதத்தால், 50 ஓவருக்கு 392 ரன் எடுத்தது. அதன் பிறகு விளையாடிய இலங்கை அணி 251 ரன் மட்டுமே அடித்தது. இலங்கை அணி பேட்டிங் விளையாடிய போது பந்தை எங்கு வீசவேண்டும் என்று வாஷின்டோன் சுந்தருக்கு சில ஆலோசனைகளை கூறினார் மகேந்திர சிங் தோனி. அந்த வீடியோவை பாருங்கள்: