வீடியோ: முதல் டி20 போட்டியின் போது தோனியின் வியக்கும் ஸ்டம்பிங்

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் கொண்ட தொடர்களை இந்தியாவிடம் இழந்தது. இரண்டு டி20 போட்டிகளில் கொண்ட தொடரில் முதல் போட்டி கட்டாக் நகரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பீல்டிங் செய்ய முடிவெடுத்தது.

அதன்படி, ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 5-வது ஓவரில் மேத்யூஸ் பந்தில் ரோகித் சர்மா 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ராகுல் ஜோடி நிதானமாக விளையாடியது.

ஆட்டத்தின் 13-வது ஓவரை வீசிய பிரதீப் ஷ்ரேயாசை அவுட் ஆக்கினார். 24 ரன்கள் எடுத்த ஷ்ரேயாஸ் பெவிலியன் திரும்ப ட்தோனி களமிறங்கினார். இருவரும் அதிரடியாக விளையாட அணியில் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 15-வது ஓவரில் 61 ரன்கள் எடுத்த ராகுல், பெரேரா பந்தில் அவுட் ஆனார்.

இறுதி கட்டத்தில் பேட்டிங் செய்ய வந்த மணிஷ் பாண்டே 2 சிக்சர்கள் அடிக்க, இந்திய அணி 20 ஓவர்களில் 180 ரன்களை எட்டியது.

அதன் பிறகு 181 ரன் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 16 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழந்து 87 ரன் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 93 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது இலங்கை அணியின் கேப்டன் திசாரா பெரேராவை ஸ்டம்பிங் செய்து அனைவரையும் வியக்கவைத்தார் மகேந்திர சிங் தோனி. அந்த வீடியோவை பாருங்கள்:

https://twitter.com/­kumarrr123/status/­943517886500323328

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.