சாப்பிட போன இடத்தில் தகராறு, ரசிகரை கட்டையால் தாக்கிய பிரித்வி ஷா ; வீடியோ உள்ளே…
சாப்பிட போன இடத்தில் ரசிகரை தாக்கிய இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா, வெளியாகிய வீடியோ பதிவு.
இந்திய அணியில் வளர்ந்து வரும் வீரர்களில் ஒருவராக பார்க்கப்படும் இளம் அதிரடி வீரர் பிரித்வி ஷா , நேற்று மும்பையில் உள்ள ஓசிவரா என்னும் இடத்தில் பைவ் ஸ்டார் விடுதியில் தன்னுடைய நண்பர் சுரேந்திரா யாதவுடன் இரவு உணவு உட்கொள்வதற்காக சென்று இருக்கிறார்.
அங்கு வந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் பிரித்வி ஷாவிடம் செல்பி புகைப்படம் எடுப்பதற்கு கேட்டுள்ளனர். முதலில் இதற்கு ஒத்துக்கொண்ட பிரித்வி ஷா, பின்பு தான் தனது நண்பருடன் சாப்பிட வந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். இதனால் கோபமடைந்த ரசிகர்கள் ப்ரீத்தி ஷாவின் நண்பர் ஆசிஷ் சுரேந்திரா யாதவ் காரின் முன்பக்கத்தை சேதப்படுத்ததுவங்கினர்.
இந்த தகவலை அறிந்த மும்பை காவல்துறையினர் உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரித்து காரை சேதப்படுத்திய எட்டு நபர்கள் மீது வழக்கு பதிந்துள்ளனர்.
வெளியான வீடியோ சிக்கலில் பிரித்வி ஷா..
இந்த நிலையில் ரசிகர்களில் ஒருவரான சப்னா கில் என்பவரை ப்ரீத்தி ஷா அங்கிருந்த கட்டையால் அடித்தார் என்று பிரித்வி ஷாவின் மீது சப்னா போலீஸிடம் புகார் அளித்துள்ளார்.
Hustle video of #Cricketer #Prithvishaw & #influencer #Sapnagill outside Barrel mansion club in vile parle east #Mumbai, it is said that related to click photo with cricketer later whole fight started. @PrithviShaw @MumbaiPolice @DevenBhartiIPS @CPMumbaiPolice @BCCI pic.twitter.com/6LIpiWGkKg
— Mohsin shaikh 🇮🇳 (@mohsinofficail) February 16, 2023
சப்னா தாக்கப்பட்டது குறித்து அவருடைய லாயர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது,“சப்னா பிரித்வி ஷாவல் தாக்கப்பட்டார், பிரித்வி ஷா கையில் கட்டை இருப்பது நன்றாகவே தெரிகிறது.மேலும் முதலில் பிரித்வி ஷா நண்பர் தான் ரசிகர்களை தாக்கியுள்ளார்.தற்போது சப்னா காவல் நிலையத்தில் உள்ளார் அவரை காவலர்கள் மருத்துவமனைக்கு அனுமதிக்கவில்லை” என்றும் ஆஷிப் அலி தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் பிரித்வி ஷாவின் கிரிக்கெட் எதிர்காலம் பாதிப்பிற்கு உள்ளாகலாம் என்றும் கிரிக்கெட் வட்டத்தில் பேசப்பட்டு வருகிறது. இதனால் பிசிசிஐ இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது