வீடியோ; கை கொடுத்த ரோஹித் சர்மா கண்டு கொள்ளாத அஸ்வின் !! 1

வீடியோ; கை கொடுத்த ரோஹித் சர்மா கண்டு கொள்ளாத அஸ்வின்

ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் போது கை கொடுக்க சென்ற ரோஹித் சர்மாவை, அஸ்வின் சட்டை செய்யாமல் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இந்தியா 250 ரன்கள் எடுத்தது. புஜாரா 123 ரன்கள் எடுத்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அஸ்வின், பும்ரா தலா 3 விக்கெட்டை வீழ்த்தினர்.

அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ராகுலும், முரளி விஜய்யும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முரளி விஜய் 18 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் ராகுலும் ஆட்டமிழந்தார்.

வீடியோ; கை கொடுத்த ரோஹித் சர்மா கண்டு கொள்ளாத அஸ்வின் !! 2

இதையடுத்து நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது. மிகவும் பொறுமையாக ஆடிய புஜாரா 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லியான் பந்துவீச்சில் பின்ச்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துர் ரோகித் சர்மா வந்தார். அவரையும் லியான் தன் சுழலில் சிக்க வைத்தார். பின்னர் வந்த ரிஷாப் அதிரடியாக ஆடினார். அவரையும் லியான் விட்டுவைக்கவில்லை. 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பின்ச்சிடம் கேட்ச் கொடுத்து ரிஷாப் வெளியேறினார். அடுத்து வந்த அஸ்வினும் நிலைத்து நிற்கவில்லை. ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனை யில் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த ரஹானேவை (70 ரன்) விக்கெட்டையும் லியான் சாய்க்க, அடுத்த வந்த இஷாந்த் சர்மா, முகமது சமி ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் சரண்டர் ஆனார்கள். இதையடுத்து இந்திய அணி 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.ஆஸ் திரே லிய தரப்பில் லியான் 6 விக்கெட்டுகளை அள்ளினார். ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் ஹசல்வுட் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி னர்.

இந்திய அணி 323 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ஆரோன் பின்சும் ஹாரிஸும் களமிறங்கினர். அஸ்வின் பின்ச் விக்கெட்டையும் முகமது ஷமி ஹாரிஸ் வீழ்த்தினர். பின்னர் கவாஜா வந்தார். அவரும் மாரிஷூம் ஜோடி சேர்ந்தனர். கவாஜா (8) அஸ்வின் பந்தை தூக்கியடித்து ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஹேண்ட்ஸ்கோம்ப் வந்தார்.

வீடியோ; கை கொடுத்த ரோஹித் சர்மா கண்டு கொள்ளாத அஸ்வின் !! 3

அவர் 14 ரன் எடுத்திருந்தபோது முகமது ஷமி பந்தில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து டிராவிஸ் ஹெட் வந்தார். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய அவரும் மார்ஷூம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இன்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்துள்ளது. மார்ஷ் 31 ரன்களுடனும்  ஹெட் 11 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில் அஸ்வின், ஷமி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

வீடியோ; கை கொடுத்த ரோஹித் சர்மா கண்டு கொள்ளாத அஸ்வின் !! 4

இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றியவுடன் தேநீர் இடைவேளை விடப்பட்டது. அப்போது, அனைவரும் அஸ்வினுக்கு கைகொடுத்து பாராட்டு தெரிவித்தனர்.

ரோஹித் சர்மாவும் அஸ்வினுக்கு கை கொடுத்து உற்சாகப்படுத்தப் பின்னால் ஓடிச் சென்றார். ஆனால், ரோஹித் சர்மாவைக் கவனிக்காமல் அஸ்வின் சென்றதால், ரோஹித் சர்மா கை கொடுக்காமல் முதுகில் தட்டிக்கொடுத்துவிட்டுச் சென்றார்.

 

இந்தக் காட்சி வீடியோவில் ஒளிபரப்பானது. ஆனால், ரோஹித் சர்மாவைக் கண்டுகொள்ளாமல் சென்றதற்கு முக்கியக் காரணம் அஸ்வின் யாருடனோ பேசிக்கொண்டே வந்ததால், ரோஹித் சர்மாவைப் பார்க்க முடியவில்லை.  இந்தச் சம்பவத்தால் அஸ்வினுக்கு கை கொடுக்காமல் ரோஹித் சர்மா திரும்பினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *