வீடியோ; விக்கெட் எடுத்த மகிழ்ச்சியை விசித்திரமாக கொண்டாடிய கிரிக்கெட் வீரர் !! 1

வீடியோ; விக்கெட் எடுத்த மகிழ்ச்சியை விசித்திரமாக கொண்டாடிய கிரிக்கெட் வீரர்

தென் ஆப்ரிக்காவில் நடக்கும் உள்ளுர் போட்டியில் கிரிக்கெட் வீரர் ரிவால்டோ மூன்சாமி விசித்திரமான கொண்டாட்டம் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

தென் ஆப்ரிக்காவில் உள்ளூர் முதல் தர கிரிக்கெட் தொடரான சிஎஸ்ஏ 3 பிரவின்சியல் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் நார்த்தன்ஸ் மற்றும் பார்டர் அணிகள் மோதிய போட்டி பிரட்டோரியாவில் நடந்தது. இந்த போட்டி டிராவில் முடிந்தது. ஆனால் இப்போட்டியில் அரங்கேறிய சம்பவ ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

இப்போட்டியில் பார்டர் அணி பேட்டிங் செய்த போது போட்டியின் 69ஆவது ஓவரை நார்த்தன்ஸ் அணிக்காக விளையாடிய ரிவால்டோ மூன்சாமி வீசினார். அந்த ஓவரில் பார்டர் வீரர் நான்னலா யிகாவை அவுட்டானார். இதையடுத்து தனது மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாத மூன்சாமி, குஷியில் தரையில் அப்படியே கம்பளிப்பூச்சி ஊர்ந்து செல்வது போல ஊர்ந்து சென்றார்.

இவரின் இந்த வேடிக்கையான கொண்டாட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மூன்சாமியின் இந்த கொண்டாட்டத்தை ரசிகர்கள் வேடிக்கையாகவும் விமர்சனம் செய்து வருகின்றனர். இப்போட்டியில் நார்தன்ஸ் அணி முதல் இன்னிங்சில் 416 ரன்கள் எடுத்தது. பார்டர் அணி முதல் இன்னிங்சில் 209 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஃபாலோ ஆன் பெற்ற பார்டர் அணி இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்தது. இதையடுத்து போட்டி டிராவில் முடிந்தது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *