வீடியோவை வெளியிட்டு ஷிகர் தவானை பங்கமாக கலாய்த்த ரோஹித் சர்மா !! 1

வீடியோவை வெளியிட்டு ஷிகர் தவானை பங்கமாக கலாய்த்த ரோஹித் சர்மா

விமானத்தில் பயணிக்கும் போது ஷிகர் தவான் தனக்கு தானே பேசி கொண்டதை, ரோஹித் சர்மா படம்பிடித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற்றது. மூன்றாவது போட்டி நாளை பெங்களூருவில் நடைபெற்ற உள்ளது. இப் போட்டியில் பங்கேற்க இந்திய அணி வீரர்கள் விமானம் மூலம் பெங்களூரு சென்றனர். அத்துடன் அங்கு தீவிர வலை பயிற்சியிலும் ஈடுபட்டனர்.

வீடியோவை வெளியிட்டு ஷிகர் தவானை பங்கமாக கலாய்த்த ரோஹித் சர்மா !! 2

இந்நிலையில் இந்திய வீரர்கள் ஒன்றாக சேர்ந்து விமானத்தில் பயணித்தபோது ஷிகர் தவான் எப்படி நடந்து கொண்டார் என்பதை ரோகித் ஷ்ரமா ஒரு வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இதனை ரோகித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஷிகர் தவான் என்னிடம் பேசவில்லை. அத்துடன் கற்பனை நண்பனிடம் பேசும் அளவிற்கு இவருக்கு வயதும் அதிகமாகிவிட்டது” எனக் கூறி இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவிற்கு ஷிகர் தவான் பதிலளித்துள்ளார். அதில், “நான் ஒரு கவிதையை சொல்லி பழகிக் கொண்டிருந்தபோது என்னை ரோகித் வீடியோ எடுத்து விட்டார். நான் விளையாட்டாக ஒரு கவிதையை சொல்லிக் கொண்டிருந்தேன். அந்தக் கவிதையை நான் இன்னும் கூட சரியாக சொல்லி பழகி இருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *