வீடியோ: பாக்கதான் சொம்ப.. ஆனால் எங்க ஃபீல்டிங் வேறமாறி.. கெத்து காட்டிய ஸ்மித்! வாயடைத்து போன ரசிகர்கள்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி–20 போட்டியில் அசத்திய தென் ஆப்ரிக்க அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி–20 தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டி போர்ட் எலிசபெத் நகரில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் குயின்டன் டி காக் 70 ரன்கள் அடித்து நல்ல துவக்கம் அளித்தார்.
ஹென்டிரிக்ஸ் 14 ரன்களிலும், டுபிளசி 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். வான் டெர் துசென் 37 ரன்கள் அடித்து சற்று ரன் சேர்க்க உதவினார். இறுதியில், தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஆரோன் பின்ச் 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். ஸ்டீவ் ஸ்மித் 29 ரன்கள் அடித்து ஆறுதல் தந்தார். அலெக்ஸ் கேரியும் (14) பெரிதளவில் சோபிக்கவில்லை.
இறுதிவரை பொறுப்பாக ஆடிய டேவிட் வார்னர் அரைசதம் கடந்தார். மிட்சல் மார்ஷ் (6), மாத்யூ வேட் (1) இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றினர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டன. நார்ட்ஜே வீசிய 20வது ஓவரில் 4 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
இதனால் ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 146 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. வார்னர் (67), ஸ்டார்க் (2) இருவரும் இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தனர். இதனையடுத்து தொடர் 1–1 என சமநிலை அடைந்தது. மூன்றாவது போட்டி வரும் 26ல் கேப்டவுனில் நடக்கிறது.
ஸ்மித் பாய்ந்துபிடித்த வீடியோ:
This is just unbelievable fielding from Steve Smith.
Don’t think I’ve seen better. #Superman pic.twitter.com/FtfzhcuTwz— The Oracle (@BigOtrivia) February 23, 2020
Ludicrous fielding from Steve Smith pic.twitter.com/Ykepk6bNTv
— Mac – The Return (@MacTheReturn1) February 23, 2020