வீடியோ; இந்திய ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாத கேட்சை பிடித்த சூர்யகுமார் யாதவ் !! 1
வீடியோ; இந்திய ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாத கேட்சை பிடித்த சூர்யகுமார் யாதவ்

டி.20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் சூர்யகுமார் யாதவ் மிரட்டலான கேட்ச் பிடித்து போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி வெஸ்ட் இண்டீஸின் பர்படோஸ் மைதானத்தில் நடைபெற்றது.

வீடியோ; இந்திய ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாத கேட்சை பிடித்த சூர்யகுமார் யாதவ் !! 2

இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.

இதன்பின் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி  களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி, வெற்றிக்காக கடுமையாக போராடியது. ஹென்ரிச் கிளாசன் உள்ளிட்ட வீரர்களின் பேட்டிங்கின் மூலம் தென் ஆப்ரிக்கா அணி வெற்றிக்கு மிக அருகில் வந்தாலும், இந்திய வீரர்களும் சளைக்காமல் வெற்றிக்காக மிக கடுமையாக போராடியதால் கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையை தென் ஆப்ரிக்கா அணி சந்தித்தது.

வீடியோ; இந்திய ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாத கேட்சை பிடித்த சூர்யகுமார் யாதவ் !! 3

ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரை எதிர்கொண்ட மிரட்டல் நாயகன் மில்லர் கடைசி ஓவரின் முதல் பந்தையே சிக்ஸர் நோக்கி அனுபினார், ஆனால் யாருமே எதிர்பாராத விதமாக சிக்ஸர் லைனில் நின்றிருந்த சூர்யகுமார் யாதவ் அசாத்தியமான கேட்ச்சை பிடித்து போட்டியில் மிகப்பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தினார். இதன் மூலம் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.

இந்தநிலையில், பதட்டமான கடைசி நேரத்திலும் சூர்யகுமார் யாதவ் அசாத்தியமான கேட்ச்சை பிடித்து போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்று கொடுத்துள்ளது. இந்திய ரசிகர்கள் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுமே சூர்யகுமார் யாதவை வெகுவாக பாராட்டி வருகின்றனர், இதனால் சூர்யகுமார் யாதவ் பிடித்த மிரட்டல் கேட்ச் குறித்தான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வீடியோ; 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *