நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோற்றாலும், புவனேஸ்வர் குமாரின் அதிரடி மறக்கமுடியாததாக அமைந்துவிட்டது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டியில் விளையாடி வருகிறது. இதன் முதல் ஒருநாள் போட்டி மும்பையில் நடைப்பெற்றது. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை, நியூசிலாந்து வென்றது.
கும்பிடு போட்ட கோலி :
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு முன்னனி வீரர்கள் ஏமாற்றினாலும் கோலி, சிறப்பாக விளையாடி 121 ரன்கள் குவித்தார். கடைசி நேரத்தில் கோலியுடன் சேர்ந்த புவனேஸ்வர் குமார் அதிரடியை காட்டினார்.
புவனேஸ்வர் குமார் 49வது ஓவரின் கடைசி பந்திலும், 50வது ஓவர் 5வது பந்தில் ஒரு அருமையான சிக்ஸர் விளாசினார்.
குமாரின் முதல் சிக்ஸரைப் பார்த்து மிரண்டு போன கோலி, புவனேஸ்வர் குமாருக்கு ஒரு கும்பிடு போட்டார்.
நேற்றைய போட்டியில் புவனேஸ்வர் குமார் 15 பந்தில் 2 சிக்ஸர், 2 பவுண்டரி விளாசி 26 ரன்களை குவித்தார். இவரின் அதிரடியால் இந்தியா 50 ஓவருக்கு 280 ரன்கள் எட்ட உதவியது.