21வது நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக ஜாஹீர் கான் களமிறங்கிய போது, இந்திய அணியின் பந்துவீச்சு பலம் அதிகரித்து கொண்டே சென்றது. 1990 இல் பிறந்த பல கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜாஹீர் கான் தான் என்பார்கள். அவரது பந்து வீச்சு அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பிடிக்கும். பந்து வீசுவதற்கு முன்பு அவர் மேலே எகுறுவது தான் அனைவர்க்கும் பிடிக்கும்.
2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலகக்கோப்பையில் இந்திய அணியின் பந்துவீச்சு தலைவராக இருந்தார் ஜாஹீர் கான். இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கால் இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது. இந்திய அணி வீரர்கள் எப்போதும் ஒன்றாக தான் சுற்றுவார்கள். கங்குலி இருக்கும் போது இந்திய அணிக்கு அறிமுகம் ஆகி, கடைசியாக திருமணம் ஆவது ஜாஹீர் கானுக்கு தான். பாலிவுட் நடிகை சகரிகா காட்கேவை மணந்தார்.
மும்பையில் உள்ள ‘தி தாஜ் மஹால் பேலஸ்’ -இல் தனது ரிஸப்ஷனை வைத்துள்ளார் ஜாஹீர் கான். இவர்களை வாழ்த்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பாலிவுட் நடிகர், நடிகைகள் என அனைவரும் வந்தார்கள். தனது காதலி அனுஷ்கா ஷர்மாவுடன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் இதில் கலந்து கொண்டார். கிரிக்கெட் போட்டியின் போது ஆக்ரோஷமாக இருக்கும் விராட் கோலி, மற்ற நேரத்தில் ஜாலியாக இருப்பார். அதை மீண்டும் நிரூபித்தார் கோலி – திருமண ஜோடி மற்றும் அனுஷ்கா ஷர்மாவுடன் டான்ஸ் போட்டார் விராட் கோலி.