வெறித்தனமாக பயிற்சி எடுக்கும் விராட் கோஹ்லி; வைரலாகும் வீடியோ !! 1
(Photo Source: Getty Images)

வெறித்தனமாக பயிற்சி எடுக்கும் விராட் கோஹ்லி; வைரலாகும் வீடியோ 

 இந்திய வீரர்கள் தீவிரமாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடரின் முடிவை தீர்மானிக்கும் மாபெரும் சக்தியாக கருதப்படும் விராட் கோலியை வீழ்த்துவதற்கு வியூகங்களை வகுத்துள்ள ஆஸ்திரேலிய அணி, அவரை வம்பிழுப்பதற்கும் தயாராகிவருகிறது

இந்தியாஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் அனல் பறக்கப்போவது உறுதியாகிவிட்டது. ஆஸ்திரேலிய வீரர்கள் கோலியை வம்பிழுக்க தயாராகிவரும் நிலையில், வலை பயிற்சியிலேயே வெறித்தனமாக வெளுத்து வாங்குகிறார் கோலி.

வெறித்தனமாக பயிற்சி எடுக்கும் விராட் கோஹ்லி; வைரலாகும் வீடியோ !! 2
ADELAIDE, AUSTRALIA – DECEMBER 04: Jasprit Bumrah of India bowls during an India training session at Adelaide Oval

இந்தியாஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்குமே முக்கியமான தொடர். இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் உள்ளன. இந்நிலையில், முதல் போட்டி அடிலெய்டில் வரும் 6ம் தேதி தொடங்குகிறது

அதற்காக இந்திய வீரர்கள் தீவிரமாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடரின் முடிவை தீர்மானிக்கும் மாபெரும் சக்தியாக கருதப்படும் விராட் கோலியை வீழ்த்துவதற்கு வியூகங்களை வகுத்துள்ள ஆஸ்திரேலிய அணி, அவரை வம்பிழுப்பதற்கும் தயாராகிவருகிறது

வெறித்தனமாக பயிற்சி எடுக்கும் விராட் கோஹ்லி; வைரலாகும் வீடியோ !! 3

இதற்கிடையே எதிரணி என்ன செய்தாலும் அதற்கு பேட்டிங்கில் தக்க பதிலடி கொடுக்கும் முனைப்பில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் விராட் கோலி.

வலைப்பயிற்சியில் குல்தீப் யாதவ் பந்தை மிகவும் ஆக்ரோஷமாக தூக்கி அடித்தார். விராட் கோலியின் ஆட்டத்தில் ஒருவிதமான ஆக்ரோஷமும் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியும் இருந்ததை உணரமுடிகிறது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

 

ஆஸ்திரேலியா தொடர் குறித்து ஜாஹிர் கான் கூறியதாவது;

பும்ராஹ் மற்றும் முகமது ஷமி ஆகியோர்ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் நிச்சயம் விளையாடுவார்கள்என்று நம்புகிறேன். அவர்களும் இந்திய அணிக்கான தனது பங்களிப்பை தொடர்ந்துசிறப்பாகவே செய்து வருகின்றனர். அதே போல் சீனியர் வீரரான இஷாந்த் சர்மாதொடர்ந்து சிறப்பாகவே பந்துவீசி வருகிறார், ஆனால் என்னை பொறுத்த வரையில்இஷாந்த் சர்மாவிற்கு பதிலாக உமேஷ் யாதவிற்கு முதல் போட்டியில் வாய்ப்புகொடுக்கலாம். உமேஷ் யாதவ், முகமது ஷமி மற்றும்  பும்ராஹ் ஆகியோரின் கூட்டணிஇந்திய அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும்” என்றார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *