இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதிய இறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 242 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பை தொடர் தற்போது இறுதிப் போட்டியை எட்டியுள்ளது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும்இறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும்பலப்பரீச்சை மேற்கொள்கின்றன. இதில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

நியூசிலாந்து அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய மார்ட்டின் கப்டில் மற்றும் நிக்கோலஸ்இருவரும் இங்கிலாந்து பந்து வீச்சில் சற்று தடுமாறினர். வழக்கம் போல மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கப்டில் வெறும் 19 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். அடுத்ததாக வந்த வில்லியம்சன் ஆடி, சதம் குறைந்தது அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், 30 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் நன்றாக ஆடிய நிக்கோல்ஸ் 55 ரன்கள் அடித்து வெளியேறியவுடன் மிகப்பெரிய ஸ்கோர் வருவது கடினம் என ஆனது. அதற்கு அடுத்ததாக வந்த அனுபவ வீரர் ராஸ் டெய்லர் துரதிஸ்டவசமாக அம்பையரின் தவறான முடிவால் 15 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். நடுவரிசையில் தொடர்ந்து ஏமாற்றம் தந்த டாம் லேத்தம் இன்றைய போட்டியில் 47 ரன்கள் எடுத்து, அணிக்கு நல்ல ஸ்கோர் எடுக்க உதவினார்.
நீசம் வந்தவுடன் அதிரடியில் ஆடினாலும் 19 ரன்கள் இருக்கையில் தவறான ஷாட் அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்தார். டி க்ராண்ட்ஹோம், சான்டனர் என கடைசியில் வந்த வீரர் தொடர்ந்து சொதப்ப 250 ரன்கள் கூட எடுக்க முடியாமல், 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தனர்.

இங்கிலாந்து சார்பில், ப்ளங்கட் மற்றும் வோக்ஸ் இருவரும் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இங்கிலாந்து அணி 242 ரன்கள் எடுத்தால் முதல் உலகக்கோப்பையை கைப்பற்றலாம் என களமிறங்க இருக்கிறது.