மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிவடைந்தவுடன் நிச்சயமாக ஓய்வு பெற்றுவிடுவார் என்ற வதந்தி எழுந்து வந்தது. ஆனால் அதை உடை தெரியும் வண்ணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தின் சிஇஓ அது உண்மை இல்லை என்று மறுத்து விட்டார். மேலும் மகேந்திர சிங் தோனி நிச்சயமாக இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாடுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
தற்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனிக்கு நண்பராக பல காலமாக அவருடன் இணைந்து விளையாடி வரும் சுரேஷ் ரெய்னா தோனி குறித்து நிறைய விஷயங்களை கூறியிருக்கிறார்.
மகேந்திர சிங் தோனி அவருக்கு கீழ் விளையாடும் வீரர்களுக்கு உற்சாகத்தையும், நம்பிக்கையையும் அளிப்பார்
மகேந்திர சிங் தோனி அவருக்கு கீழ் விளையாடும் வீரர்கள் அனைவரையும் எப்பொழுதும் சரிக்கு சமமாக பார்ப்பார். சீனியர் வீரர்கள் இளம் வீரர்கள் என்ற பாகுபாடு இன்றி அனைத்து வீரர்கள் மத்தியிலும் ஒரே மாதிரி நடந்துகொள்வார். மேலும் அவர்களுக்கு என்ன தேவை என்பதை, அவர்களின் நடவடிக்கை மூலமாக உணர்ந்துகொண்டு அதற்கேற்ப அவர் செயல்படுவார்.

ருத்ராஜ், டுவைன் பிராவோ, சாம் கரன், மொயின் அலி என அனைத்து வீரர்களுக்கும் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் எப்பொழுதும் மகேந்திர சிங் தோனி அளித்து கொண்டே இருப்பார் என்று சுரேஷ் ரெய்னா கூறியிருக்கிறார்.
மகேந்திர சிங் தோனிக்காக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை நாங்கள் கைப்பற்றுவோம்
இத்தனை ஆண்டு காலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மிக சிறப்பாக தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறார். அவருக்காகவே இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி மிக சிறப்பாக செயல்பட்டு, கோப்பையை கைப்பற்ற முயற்சிப்போம். அவர் எனக்கு அண்ணன் போல என்றும் சுரேஷ் ரெய்னா தற்பொழுது கூறியிருக்கிறார். மேலும் மகேந்திர சிங் தோனிக்கு நான்காவது ஐபிஎல் போட்டியை நாங்கள் நிச்சயமாக பெற்றுத்தருவோம் என்கிற நம்பிக்கையையும் சுரேஷ் ரெய்னா அண்மையில் தெரிவித்துள்ளார்

.
இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பாதி போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2-வது இடத்தில் இருக்கிறது. மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் வருகிற செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்கு மேல் தூங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.