அவ்வளவு நல்ல துவக்கம் கொடுத்த அப்புறமும், இந்தியா தோத்துட்டோம்னா.. அதுக்கு முக்கிய காரணம் இது தான் - ரோகித் சர்மா வருத்தத்துடன் பேட்டி! 1

மூன்றாவது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்தது, தொடரையும் இழந்ததற்கு என்ன காரணம் என்று தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் ரோகித் சர்மா.

சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு சிறப்பான துவக்கம் கிடைத்தது. ஆஸ்திரேலிய அணிக்கு அதிகபட்சமாக மார்ஷ் 47 ரன்கள், அலெக்ஸ் கேரி 38 ரன்கள், டிராவிஸ் ஹெட் 33 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க 49 ஓவர்களில் 269 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அவ்வளவு நல்ல துவக்கம் கொடுத்த அப்புறமும், இந்தியா தோத்துட்டோம்னா.. அதுக்கு முக்கிய காரணம் இது தான் - ரோகித் சர்மா வருத்தத்துடன் பேட்டி! 2

270 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா இருவரும் மிக சிறப்பான துவக்கம் அமைத்துக் கொடுத்தனர். இந்த ஜோடி 65 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா, 17 பந்துகளுக்கு 30 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

மூன்றாவது விக்கெட்டுக்கு விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் ஜோடி சேர்ந்து 69 ரன்கள் சேர்த்தனர். கேஎல் ராகுல் 32 ரன்களுக்கும் விராட் கோலி 54 ரன்களுக்கும் அவுட்டாகினர்.

 

அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் மூன்றாவது முறையாக இந்த தொடரில் வந்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். நம்பிக்கை கொடுத்து வந்த ஹர்திக் பாண்டியா 40 ரன்களுக்கும், ஜடேஜா 18 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேற, ஆஸ்திரேலியா அணியின் பக்கம் ஆட்டம் திரும்பியது.

அவ்வளவு நல்ல துவக்கம் கொடுத்த அப்புறமும், இந்தியா தோத்துட்டோம்னா.. அதுக்கு முக்கிய காரணம் இது தான் - ரோகித் சர்மா வருத்தத்துடன் பேட்டி! 3

இறுதியில் 49.1 ஓவரில் இந்திய அணி 248 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால், ஆஸ்திரேலியா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

2019 ஆம் ஆண்டிற்கு பிறகு, முதல்முறையாக சொந்த மண்ணில் இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி முடிந்த பிறகு விருது வழங்கும் விழாவில் பேட்டியளித்த அளித்த ரோகித் சர்மா, தோல்விக்கான காரணங்களை கூறினார். அவர் பேசியதாவது:

அவ்வளவு நல்ல துவக்கம் கொடுத்த அப்புறமும், இந்தியா தோத்துட்டோம்னா.. அதுக்கு முக்கிய காரணம் இது தான் - ரோகித் சர்மா வருத்தத்துடன் பேட்டி! 4

“இது ஒன்றும் சேஸ் செய்ய முடியாத ஸ்கோர் இல்லை. நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. சிறப்பான துவக்கம் கிடைத்த பிறகு வரிசையாக விக்கெட்டுகளை இழந்து பார்ட்னர்ஷிப் அமைக்க தவறிவிட்டோம். அதுதான் இன்றைய தோல்விக்கு முக்கிய காரணம். இந்த விக்கெட்டுகாக பல வருடங்களாக பழகி இருக்கிறோம். அவ்வளவு சிறப்பான துவக்கம் கிடைத்த பிறகு நடுவில் ஒரு பேட்ஸ்மேன் நன்றாக எடுத்துச் சென்றிருக்க வேண்டும் துரதிஷ்டவசமாக அது நடக்கவில்லை.

இந்த போட்டியில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அதேபோல் இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை விளையாடிய 9 ஒருநாள் போட்டிகளில் இருந்து எடுத்துக்கொள்ள நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றன. இந்த தொடரில் ஏற்பட்ட தோல்வி ஒட்டுமொத்த அணியும் நன்றாக செயல்படவில்லை என்பதற்கான தோல்வியாகும். இந்த தொடரில் செய்த தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வோம். மேலும் எந்த இடத்தில் தவறு நேர்ந்தது என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். ஆஸ்திரேலியா அணியினர் அபாரமாக செயல்பட்டார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவர்களின் ஸ்பின்னர்கள் இரண்டு பேரும் நிறைய அழுத்தம் கொடுத்தனர்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *