எங்க சொந்த நாட்டு காரனுங்களே சதி பண்ணிட்டாங்க.. நாங்க கேட்ட மாதிரி பிட்ச் தரல - தோல்விக்கு பின் புலம்பிய பாபர் அசாம்! 1

இதனால் தான் நாங்கள் தோத்துப்போனோம் என புலம்பியுள்ளார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்.

சுமார் 17 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் வந்து மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது இங்கிலாந்து அணி. முதல் டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

எங்க சொந்த நாட்டு காரனுங்களே சதி பண்ணிட்டாங்க.. நாங்க கேட்ட மாதிரி பிட்ச் தரல - தோல்விக்கு பின் புலம்பிய பாபர் அசாம்! 2

 

போட்டியின் முதல்நாள் முடிவில் நான்கு இங்கிலாந்து வீரர்கள் சதம் அடித்தது உட்பட, நான்கு விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 506 ரன்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து அணி. அதன் பிறகும் நிறுத்தாமல் முதல் இன்னிங்ஸ் முடிவில் 657 ரன்கள் அடித்திருந்தது.

இதை பாகிஸ்தான் அணி சமாளிக்குமா? என எதிர்பார்த்த போது முதல் இன்னிஸில் அபாரமாக விளையாடி 579 ரன்கள் அடித்திருந்தது. 3 பாகிஸ்தான் வீரர்கள் சதமடித்தனர்.

இங்கிலாந்து அணி

78 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிசை தொடர்ந்த இங்கிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோர் மற்றும் முன்னிலை பெற்ற ரன்கள் இரண்டும் சேர்த்து, இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் 342 ரன்கள் எடுத்திருந்தது.

343 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய பாகிஸ்தான் அணி நன்றாக பார்ட்னர்ஷிப் அமைத்து மெல்ல மெல்ல வெற்றியை நோக்கி ஐந்தாம் நாளில் நகர்ந்தது. ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி 258க்கு 5 விக்கெட்டுகள் மட்டுமே இழந்திருந்தபோது, நிச்சயம் வெற்றி பெற்று விடும் என எதிர்பார்த்த நிலையில், அடுத்த 10 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதாபமாக 74 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

எங்க சொந்த நாட்டு காரனுங்களே சதி பண்ணிட்டாங்க.. நாங்க கேட்ட மாதிரி பிட்ச் தரல - தோல்விக்கு பின் புலம்பிய பாபர் அசாம்! 3

போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறுகையில், “நாங்கள் மைதானத்தை தயார் செய்பவரிடம் எங்களது திட்டத்தை கூறி, இப்படித்தான் பிட்ச் இருக்கவேண்டும் என எடுத்துச் சொன்னோம். அதற்கேற்றவாறு மைதானத்தை தயார் செய்வார் என எதிர்பார்த்துக் கொண்டே நாங்கள் பயிற்சியில் ஈடுபட்டோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்தவாறு பிட்ச் இல்லை. ஆகையால் எங்களது பயிற்சியும் வீணாகியது. திட்டமிட்டபடி எங்களது எதுவும் நடக்காமல் போனது. அதனால் தான் சொந்த மைதானத்தில் தோல்வியடைந்து நிற்கின்றோம்.” என புலம்பினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *