இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நீடிக்க வேண்டுமா?- ட்விட்டரில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள் 1

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் இழந்துள்ள நிலையில், அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரையை மாற்றுக்கோரி நெட்டிஸன்கள் கடுமையாகச் சாடி வருகின்றனர்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. பர்மிங்ஹாமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்திலும், லாட்ர்ஸ் மைதானத்தில் மோசமான தோல்வியையும் சந்தித்த இந்திய அணி 3-வது டெஸ்டில் இங்கிலாந்துக்குப் பதிலடி கொடுத்தது. இதனால், 2-1 என்ற நிலையில் டெஸ்ட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டி இருந்தது.

இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நீடிக்க வேண்டுமா?- ட்விட்டரில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள் 2

இதனால் சவுத்தாம்டனில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், 245 ரன்கள் இலக்கை அடையமுடியாமல் இந்திய அணி 60 ரன்களில் தோல்வி அடைந்து டெஸ்ட் தொடரை இழந்தது. இந்த 4 டெஸ்ட் போட்டிகளிலும் கேப்டன் விராட் கோலி, ரஹானே, புஜாரா ஆகிய 3 வீரர்களைத் தவிர எந்த ஒருவீரரும் சிறப்பான பங்களிப்பை அளிக்கவில்லை.

இந்திய அணி வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் மோசமாகச் செயல்படுவது தொடர்ந்து வருகிறது. இந்தத் தோல்விகளுக்கு பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும், ரவி சாஸ்திரியை நீக்க வேண்டும் என்றும், அனில் கும்ப்ளேயை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்றும் நெட்டிஸன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நெட்டிஸன் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதில், “விராட் கோலி போன்று குளோன் முறையில் 11 கோலியை உருவாக்குங்கள் அப்போதுதான் வெற்றி பெறுவீர்கள். ரவி சாஸ்திரியை ஏதாவது குளிர்பானம் குடிக்கச் சொல்லுங்கள். இந்தியாவுக்கு விரைவாக வந்து அடுத்த ஐபிஎல் தொடருக்குப் பயிற்சி எடுங்கள்” என்று கடுமையாக தெரிவித்துள்ளார்.

ஆசாத் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், “இந்திய அணிக்கு ரவி சாஸ்திரியின் பங்களிப்பு என்ன என்பதை யாரேனும் கேட்டுப் பதிவிடுங்கள். ஊடகங்களிடம் அதீத நம்பிக்கையை வெளிப்படுத்துவதைக் காட்டிலும் ரவி ஒன்றும் செய்யவில்லை. இந்திய அணி மிகப்பெரிய தவறுகளைச் செய்துவருகிறது அதைக் கவனிக்கவில்லை. அஸ்வினைக் காட்டிலும் சிறந்த பந்துவீச்சாளர் மொயின் அலி இல்லை. ஆனால், அவரிடம் இந்திய வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நீடிக்க வேண்டுமா?- ட்விட்டரில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள் 3

ரமேஷ் மணி என்பவர் பதிவிடுகையில், “5-வது டெஸ்ட் போட்டிக்கு 4 மாற்றங்கள் செய்ய வேண்டும். ராகுலுக்கு பதிலாக பிரித்வி ஷா, அஸ்வினுக்கு பதிலாக ரவிந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக உமேஷ் யாதவ், தவணுக்கு பதிலாக கருண் நாயர் களமிறக்க வேண்டும். தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, புஜாரா களமிறங்க வேண்டும். குறிப்பாகப் பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவி சாஸ்திரியை நீக்கிவிட்டு, கிறிஸ்டன் அல்லது கும்ப்ளேயை அழைக்க வேண்டும். விராட் நம்பிக்கையுள்ள கேப்டனாக திகழ்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நீடிக்க வேண்டுமா?- ட்விட்டரில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள் 4

மார்ள் ஜி என்பவர் ட்விட்டரில் கூறுகையில், “கிரிக்கெட்டில் மிகவும் புகழ்பெற்ற பொய்யை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா. ரவி சாஸ்திரி இங்கிலாந்து புறப்படும்போது கூறியதுதான். எங்களுக்கு ஆடுகளத்தைப் பற்றியும், அங்குள்ள காலச்சூழல் குறித்தும் எந்தவிதமான கவலையும் இல்லை என்று கூறியதுதான் சிறந்த பொய்” எனத் தெரிவித்துள்ளார்.

ஷாம் என்பவர் ட்விட்டரில் தெரிவிக்கையில், “4-வது டெஸ்ட் போட்டியின் போது, இன்னிங்ஸ் பிரேக்கின்போது ரவி சாஸ்திரி எங்களுக்கு 270 ரன்களுக்குள் இலக்கு இருந்தால், எளிதாக சேஸ் செய்துவிடுவோம் எனத் தெரிவித்திருந்தார். ஆனால், இப்போது 70 ரன்கள் அடிப்பதை இந்திய அணிக்குக் கடினமாகிவிட்டது. எங்கே நம்முடைய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. சமீபகாலமாக ரவி சாஸ்திரி பேசும் வார்த்தைகள் போட்டியை வென்றுவிட்டது போன்ற தொனியில் இருக்கிறது “எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நீடிக்க வேண்டுமா?- ட்விட்டரில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள் 5

அஜித் தோவல் என்ற நெட்டிஸன் ட்விட்டரில் வித்தியாசமாகப் பதிவிட்டுள்ளார், அதில், “இந்திய அணிக்குப் பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக ராகுல் டிராவிட்டை நியமிக்க வேண்டும் “என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *