நாங்கள் கிரிக்கெட் குடும்பம், மைதானத்திற்குள் தான் சண்டை போடுவோம், வெளியில் இல்ல; மனம் திறந்த முகமது ரிஸ்வான் !! 1

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் முஹம்மது ரிஸ்வான் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் பொழுது அனைத்து அணிகளுடன் நட்போடு தான் இருக்கிறோம் என்று பேசியுள்ளார்.

சமகால கிரிக்கெட் தொடரின் சிறந்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் ஒருவராக கருதப்படும் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முஹம்மது ரிஸ்வான் 2021 உலக கோப்பை தொடரின் பொழுது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கட்டித்தழுவி தனது அன்பை வெளிப்படுத்தினார்.

2021 உலக கோப்பை தொடரில் இந்திய அணியை பத்து விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி மிகவும் எளிதாக வெற்றி பெற்றது, இதில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் (68), மற்றும் அந்த அணியின் நட்சத்திர வீரர் முஹம்மது ரிஸ்வான்(79) ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

நாங்கள் கிரிக்கெட் குடும்பம், மைதானத்திற்குள் தான் சண்டை போடுவோம், வெளியில் இல்ல; மனம் திறந்த முகமது ரிஸ்வான் !! 2

வரலாற்று நிகழ்வுகளாளும் அரசியல் காரணங்களாலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் மோதல் போக்கு இருந்து வருகிறது, இதே நிலைமை கிரிக்கெட் போட்டியிலும் நிலவி வருவதாக கூறப்படுகிறது, ஆனால் அதை எல்லாம் தவிடு பொடியாக்கும் வகையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் முஹம்மது ரிஸ்வான் இந்திய அணியை பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற பின்பும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தினார். இது ஒரு சிறந்த விளையாட்டு வீரருக்கான அடையாளம் என்று ரசிகர்கள் உட்பட அனைவரும் பாராட்டினர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வான் மற்ற நாடுகள் குறித்து பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் பொழுது பேசியுள்ளார்.

நாங்கள் கிரிக்கெட் குடும்பம், மைதானத்திற்குள் தான் சண்டை போடுவோம், வெளியில் இல்ல; மனம் திறந்த முகமது ரிஸ்வான் !! 3

அதில் பேசிய அவர், நமக்கெல்லாம் ஒவ்வொரு நாடு குறித்தும் ஒவ்வொருவிதமான கண்ணோட்டமும் விமர்சனமும் இருக்கும், ஆனால் கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரை மைதானத்திற்கு வெளியில் நல்ல நண்பர்களாகவே அனைத்து நாடுகளுடனும் ஆனால் போட்டி என்று வந்துவிட்டால் அவர்களை எப்படி வீழ்த்த வேண்டும் என்பது பற்றி மட்டும்தான் யோசித்து வருவோம்.

உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் வெற்றி பெற்ற பின்பும் இந்திய அணியின் ஜாம்பவான்களான தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் இடத்தில் பேசிக்கொண்டிருந்தோம் நாங்கள் அனைவரும் கிரிக்கெட் குடும்பம் , இதில் அனைத்து நாடுகளுமே அடங்கும் என்று முஹம்மது ரிஸ்வான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *