எங்களுக்கு வேற வழி கிடையாது... நாங்க இத செஞ்சு தான் ஆகனும்; இந்திய அணியிடம் நாங்கள் பட்ட அசிங்கத்திற்கு இது தான் காரணம்; ஸ்டோக்ஸ் வேதனை !! 1
எங்களுக்கு வேற வழி கிடையாது… நாங்க இத செஞ்சு தான் ஆகனும்; இந்திய அணியிடம் நாங்கள் பட்ட அசிங்கத்திற்கு இது தான் காரணம்; ஸ்டோக்ஸ் வேதனை

இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தங்களை விட அனைத்து வகையிலும் மிக சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தியதாக இங்கிலாந்து அணியின் கேப்டனான பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது.

எங்களுக்கு வேற வழி கிடையாது... நாங்க இத செஞ்சு தான் ஆகனும்; இந்திய அணியிடம் நாங்கள் பட்ட அசிங்கத்திற்கு இது தான் காரணம்; ஸ்டோக்ஸ் வேதனை !! 2

இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று வெற்றியுடன் தொடரை துவங்கிய இங்கிலாந்து அணி, அடுத்தடுத்த நான்கு போட்டிகளிலும் மிக மோசமான தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கெத்தாக கைப்பற்றியது.

இந்தநிலையில், இந்திய அணிக்கு எதிரான தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டனான பென் ஸ்டோக்ஸ், தங்களை விட சிறப்பான அணியிடமே தோல்வியை சந்தித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு வேற வழி கிடையாது... நாங்க இத செஞ்சு தான் ஆகனும்; இந்திய அணியிடம் நாங்கள் பட்ட அசிங்கத்திற்கு இது தான் காரணம்; ஸ்டோக்ஸ் வேதனை !! 3

இது குறித்து பென் ஸ்டோக்ஸ் பேசுகையில், “நாங்கள் எங்களைவிட சிறப்பான வலுவான அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளோம். இந்த தொடரின் தோல்வியால் துவண்டுவிடாமல் அடுத்தடுத்த தொடர்கள் மற்றும் போட்டிகள் மீது கவனம் செலுத்துவோம். இந்த தொடர் முழுவதும் நாங்கள் சிறிய சிறிய தவறுகள் தான் செய்துள்ளோம், அதே போல் ஒட்டுமொத்தமாக பார்த்தால் நாங்கள் எங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்பதே உண்மை. நாங்கள் செய்த தவறுகள் என்ன என்பதும், தோல்விக்கான காரணம் என்ன என்பதும் எங்களுக்கு நன்றாகவே தெரியும். இந்திய அணி பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்டது என்பது உண்மை. ஒரு அணியாக எங்களை நாங்கள் வலுப்படுத்தி கொள்வோம். ஜோ ரூட் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார். ஜேம்ஸ் ஆண்டர்சன் 700 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது, அவர் தற்போதும் பிட்டாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது. கிரிக்கெட்டிற்காக அவரது அர்பணிப்பும், உழைப்பும் பெரியது. ஆண்டர்சனுடன் ஒன்றாக விளையாடுவதும் சிறப்பான விசயம். இந்திய அணிக்கு எதிரான தோல்வியை மறந்துவிட்டு அடுத்தடுத்த தொடர்களில் கவனம் செலுத்துவோம்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *