தென்னாபிரிக்காவை இப்படி செஞ்சு அனுப்பிருக்கீங்க.. - பிரபல தென்னாபிரிக்க வீரர் கதறல் 1

தென்னாப்பிரிக்க அணியை அனைத்து விதமாகவும் அடித்து அனுப்பி இருக்கிறார்கள் என பிரபல தென்னாபிரிக்க வீரர் ஹாசிம் அம்லா பேட்டியளித்துள்ளார்.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்னாபிரிக்க அணி மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் பெரிதாக தோல்வியை சந்தித்து 0-3 என ஒயிட்வாஷ் செய்யப்பட்டது. குறிப்பாக இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் வரலாறு காணாத அளவிற்கு இன்னிங்ஸ் தோல்வியை தென்ஆப்பிரிக்க அணி சந்திக்க நேரிட்டது.

தென்னாபிரிக்காவை இப்படி செஞ்சு அனுப்பிருக்கீங்க.. - பிரபல தென்னாபிரிக்க வீரர் கதறல் 2

இதற்கு முன்னர் தென் ஆப்பிரிக்கா அணியை டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ‘ஒயிட் வாஷ்’ செய்ததே இல்லை. இதுவே முதல் முறை ஆகும்

பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்து விதமாகவும் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை அடக்கி ஆண்டது.

இந்தியா-தென்னாப்பிரிக்கா தொடர் குறித்து பேட்டியளித்த பிரபல தென்ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா கூறுகையில், “மொத்தமாக தென்ஆப்பிரிக்காவை இந்தியா அடக்கி விட்டார்கள். இந்தியாவின் பேட்டிங் பந்துவீச்சு இரண்டிற்கும் தென்னாப்பிரிக்காவால் பதிலளிக்க முடியவில்லை. இந்திய பந்துவீச்சிற்க்கு தென்னாபிரிக்கா திணறியதை அனைவராலும் காண முடிந்தது” என்றார்.

தென்னாபிரிக்காவை இப்படி செஞ்சு அனுப்பிருக்கீங்க.. - பிரபல தென்னாபிரிக்க வீரர் கதறல் 3

மேலும் பேசிய அவர், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் மட்டுமே தென்னாப்பிரிக்கா சற்று பேசும் அளவிற்கு செயல்பட்டது. அதன் பிறகு தொடர் முழுவதும் இந்தியாவிற்கு நூல் அளவில் கூட தென் ஆப்பிரிக்கா பதில் தாக்குதல் நடத்தவில்லை என்பது கவனித்து சரி செய்யவேண்டியது என்றார்.

சுமார் 55 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி இரண்டு முறை இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்திருக்கிறது.

இந்த தொடர் வெற்றியின் மூலம் இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் 240 புள்ளிகளுடன் கம்பீரமாக முதலிடத்தில் நீடிக்கிறது முதல் மற்றும் இரண்டாம் அணிகளுக்கு இடையே கிட்டத்தட்ட 150 புள்ளிகள் வித்தியாசம் உள்ளதால் இந்தியாவை மற்ற அணிகளை நெருங்கவே முடியாது என கணிக்கப்பட்டு வருகின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *