இது வெறும் ட்ரைலர் மட்டும் தான்; எச்சரிக்கும் இங்கிலாந்து அணியின் கேப்டன் !!
நிகழ்கால கிரிக்கெட் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளராக உருவெடுத்து வரும் ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது முழுமையான ஆட்டத்தை இன்னும் வெளிப்படுத்தவே இல்லை என இங்கிலாந்து அணியின் கேப்டனான இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை மற்றும் ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் மத்திய ஒப்பந்தத்தில் இடம் பிடித்துள்ளார் ஜாப்ரா ஆர்சர்.
இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணியாக விளங்கும் ஜப்ரா, இன்னும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணி கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

ஜாப்ரா ஆர்சர் குறித்து மோர்கன் கூறுகையில் ‘‘ஜாப்ரா பந்து வீச்சை பார்க்க ஆர்வமாக இருக்கிறது. அவர் மிகவும் வேகமாக பந்து வீசுகிறார். அணிக்கு முக்கிய காரணியாக விளங்குகிறார். எந்தவொரு வகையான கிரிக்கெட்டிலும், எந்தவொரு சூழ்நிலையிலும் அவரால் பந்து வீச இயலும்.

அவரின் முழுத்திறமையையும் நாம் இன்னும் பார்க்கவில்லை. எல்லா நேரங்களிலும் அவர் கற்றுக் கொள்ள விரும்புகிறார்’’ என்றார்.
நியூசிலாந்து தொடருக்கான இங்கிலாந்து அணி;
ஜோ ரூட்
ஜோப்ரா ஆர்ச்சர்
ஸ்டூவர்ட் பிராட்
ரோரி பர்ன்ஸ்
ஜோஸ் பட்லர்
ஸாக் கிராலி
சாம் கரண்
ஜோ டென்லி
ஜாக் லீச்
சாகிப் மஹ்மூத்
மாட் பார்கின்சன்
ஓலி போப்
டோமினிக் சிப்லி
பென் ஸ்டோக்ஸ்
கிறிஸ் வோக்ஸ்