இந்தியாவும் அம்பயரும் சேர்ந்து எங்களுக்கு அநீதி இழைத்து விட்டார்கள் என்று ஐசிசி இடம் முறையிடுவோம், வங்கதேச கிரிக்கெட் அதிகாரி பேட்டி அளித்துள்ளார்.
சூப்பர் 12 சுற்றின் நான்காவது போட்டியில் அடிலெய்டு மைதானத்தில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. பரபரப்பிற்கு சற்றும் குறையின்றி போட்டி நடந்து முடிந்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 184 ரன்கள் அடித்து ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்தது. 185 ரன்கள் அடித்தால் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்யலாம் என்ற முனைப்போடு களமிறங்கிய வங்கதேச அணிக்கு அவர்கள் திட்டப்படி அனைத்தையும் சரியாக அமைந்தது.
லிட்டன் தாஸ் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பௌண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசி 21 பந்துகளுக்கு அரை சதம் அடித்தார். போட்டியில் ஏழு ஓவர்கள் முடிந்திருந்தபோது 66 ரன்களை வங்கதேச அணி எடுத்திருந்தது. திடீரென போட்டியின் நடுவே மழை பெய்ததால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது.
பின்னர் 16 ஓவர் போட்டிகளாக மாற்றப்பட்டு பங்கதேச அணிக்கு இலக்கு 151 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதை எட்ட முடியாமல் வங்கதேச வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாக ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினர்.
இலக்கை எட்ட முடியாத காரணத்தால் தற்போது வங்கதேச வீரர்கள் போட்டியில் நடந்தவற்றை குறிப்பிட்டு, இதன் காரணமாகத்தான் தோல்வியை தழுவினோம் என்று பேசி வருகின்றனர்.
அந்த வகையில் விராட் கோலி போலியாக பீல்டிங் செய்தார் என்றும், மழைக்குப் பிறகு மைதானம் இன்னும் ஈரப்பதமாக இருந்தது நடுவர்கள் வற்புறுத்தி விளையாட வைத்தார்கள் என்றும் ஐசிசி இடம் முறையிடப் போவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரி தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில்,
“மீண்டும் அந்த சம்பவத்தை பார்க்கையில் விராட் கோலி செய்த போலியான பீல்டிங் தெளிவாகத் தெரிந்தது. ஆனால் நடுவர்கள் அதை பார்க்கவில்லை. ஐந்து ரன்கள் கொடுக்க முடியாது என்று தொடர்ந்து வாதமிட்டு வருகின்றனர். அவர் ஒருத்தலை பட்சமாக இருந்தது.
அடுத்ததாக மைதானம் இன்னும் ஈரப்பதமாக இருக்கிறது. இன்னும் சில நேரங்கள் எடுத்துக்கொண்டு பொறுமையாக விளையாடலாம் என்று சகிப் அல் ஹசன் மீண்டும் நடுவரிடம் பேசினார். ஆனால் அதற்கும் செவிசாய்க்காமல் இந்தியாவிற்கு சாதகமாக நடுவர்கள் செயல்பட்டார்கள். உடனடியாக போட்டியை நடத்த வேண்டும் இதில் விவாதம் எதுவும் நடத்த வேண்டாம். வாக்குவாதத்தில் ஈடுபட்டால் நேரம் இன்னும் அதிகமாகும் என்று எங்களது கேப்டனை அடக்கம் முயற்சித்து, விளையாட வைத்தார்கள்.
இதை நாங்கள் எழுத்துப்பூர்வமாகவும் இணையதளம் வாயிலாகவும் ஐசிசி இடம் முறையிடுவோம்.” என்று கூறினார்.