இப்ப வர ஒரு சிக்ஸ் கூட அடிக்கல... பந்துவீச்சிலும் ரொம்ப மோசம்; ரவீந்திர ஜடேஜாவை விமர்சித்து பேசிய முன்னாள் வீரர் !! 1
இப்ப வர ஒரு சிக்ஸ் கூட அடிக்கல… பந்துவீச்சிலும் ரொம்ப மோசம்; ரவீந்திர ஜடேஜாவை விமர்சித்து பேசிய முன்னாள் வீரர்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன் ரவீந்திர ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தன்னை முன்னேற்றி கொள்ள வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளுக்கான சாம்பியனை முடிவு செய்யும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இப்ப வர ஒரு சிக்ஸ் கூட அடிக்கல... பந்துவீச்சிலும் ரொம்ப மோசம்; ரவீந்திர ஜடேஜாவை விமர்சித்து பேசிய முன்னாள் வீரர் !! 2

கடந்த 2011ம் ஆண்டிற்கு பிறகு ஐசிசி., கோப்பைகளை வெல்ல முடியாமல் இந்திய அணி தடுமாறி வருவதால், உலகக்கோப்பை இந்த முறை இந்தியாவில் நடைபெற உள்ளதை பயன்படுத்தி இந்திய அணி இந்த முறையாவது சாம்பியன்  பட்டத்தை வெல்ல வேண்டும் என ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். இதனால் முன்னாள் இந்திய வீரர்கள் பலரும் இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா, உலகக்கோப்பை தொடருக்கு முன் ரவீந்திர ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தன்னை முன்னேற்றி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இப்ப வர ஒரு சிக்ஸ் கூட அடிக்கல... பந்துவீச்சிலும் ரொம்ப மோசம்; ரவீந்திர ஜடேஜாவை விமர்சித்து பேசிய முன்னாள் வீரர் !! 3

இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “ இந்த வருடம் முழுவதும் ரவீந்திர ஜடேஜா ஒருநாள் போட்டிகளில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சரியாக செயல்படவில்லை என்பதே உண்மை. இந்த வருடத்தில் இதுவரை 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா அதில் வெறும் 138 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவர் அதிகபட்சமாக எடுத்த ரன்னே 45 தான், அந்த 45 ரன்னையும் எடுத்துவிட்டால் அவரது பேட்டிங் ஒன்றுமே இல்லை என்பதே உண்மை. இந்த வருடத்தில் இதுவரை 234 பந்துகளை எதிர்கொண்டுள்ள ரவீந்திர ஜடேஜா அதில் வெறும் 9 பவுண்டரிகள் மட்டுமே அடித்துள்ளார், ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. ரவீந்திர ஜடேஜா களமிறங்கும் 7வது இடம் மிக முக்கியமானது, பல இக்கட்டான நிலைகளை 7வது இடத்தில் களமிறங்கும் வீரர்களே சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். ஜடேஜா பந்துவீச்சிலும் சரியாக செயல்படுவது இல்லை என்பது மற்றொரு உண்மை. உலகக்கோப்பை தொடருக்கு முன் ஜடேஜா தன்னை பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் தன்னை முன்னேற்றி கொள்ள வேண்டியது அவசியமானது” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *