அணில் கும்ப்ளே விலகியதற்கு யார் காரணம்; வி.வி.வி எஸ் லக்‌ஷமண் வெளியிட்ட புது தகவல் !! 1

அணில் கும்ப்ளே விலகியதற்கு யார் காரணம்; வி.வி.வி எஸ் லக்‌ஷமண் வெளியிட்ட புது தகவல்

இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே மற்றும் கேப்டன் விராட் கோலி ஆகிய இருவருக்கும் இடையே நடந்த பனிப்போர் அனைவரும் அறிந்ததே. கும்ப்ளே பயிற்சியாளராக நீடிப்பதை விரும்பாத விராட் கோலி, பிசிசிஐ-க்கு நெருக்கடி கொடுத்து ரவி சாஸ்திரியை பயிற்சியாளராக நியமிக்க ஆதரவு தெரிவித்து, அதை அடையவும் சென்றார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான வி.வி.எஸ்   லக்‌ஷ்மன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அணில் கும்ப்ளே தான் பதவி விலக வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

அணில் கும்ப்ளே விலகியதற்கு யார் காரணம்; வி.வி.வி எஸ் லக்‌ஷமண் வெளியிட்ட புது தகவல் !! 2

இது குறித்து பேசிய வி.வி.எஸ் லக்‌ஷ்மண், நாங்கள் அனைவரும் அணில் கும்ப்ளே பயிற்சியாளராக தொடர வேண்டும் என்றே விரும்பினோம். அவரிடன் நிறைய முறை இதை வலியுறுத்தவும் செய்தோம் ஆனால் அணில் கும்ப்ளே தனது ரஜினாமாவில் மிக உறுதியாக இருந்தார். நாங்கள் எவ்வளவோ சொல்லியும் அவர் தனது முடிவை மாற்றி கொள்ளாமல் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.

அதே போல் இது குறித்து பேசிய முன்னாள் வீரர் கவாஸ்கர்,

“கும்ப்ளே – கோலி இடையேயான கருத்து வேறுபாடுகள் குறித்து எனக்குக் குறைவாகவே தெரியும். ஆனால், இது இந்திய கிரிக்கெட்டின் துக்க நாள். அனில் கும்ப்ளே பயிற்சியாளர் ஆன நாளிலிருந்து இந்தியா கிட்டத்தட்ட அனைத்துப் போட்டிகளையும் வென்றுள்ளது.

அணில் கும்ப்ளே விலகியதற்கு யார் காரணம்; வி.வி.வி எஸ் லக்‌ஷமண் வெளியிட்ட புது தகவல் !! 3

கடந்த ஒருவருடத்தில் கும்ப்ளே தவறு எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. கருத்து வேறுபாடுகள் எல்லா அணிகளிலும் ஏற்படும். ஆனால், ஆட்ட முடிவுகளையே இறுதியில் காணவேண்டும்.

ராஜிநாமா செய்ய கும்ப்ளேவுக்குக் காரணங்கள் இருந்திருக்கும். ஆனால் அவர் பணியில் நீடிப்பார் என நினைத்தேன். ஆலோசனைக் குழு கும்ப்ளேவுக்கு ஆதரவாக உள்ளதால் அவர் பணியில் நீடித்திருக்க வேண்டும். நிச்சயம் அவர் இன்னும் பலமாக மீண்டுவருவார் என எண்ணுகிறேன்.

ஆனால் முதல்முறையாக போராட்டக் குணம் கொண்ட கும்ப்ளே அதை எதிர்த்து நிற்கவில்லை. ஒரு வீரராகவும், நிர்வாகியாகவும்  அனில் கும்ப்ளேவிடம் உள்ள திறமைகளும் அனுபவங்களும் இந்திய கிரிக்கெட்டுக்குப் பயன்படவேண்டும்” என்று உருக்கத்துடன் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *