இதுதான் எனது பெருமை! தோனியின் தளபதி நான் தான்! மார்தட்டும் சுரேஷ் ரெய்னா!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக விளையாடி வருபவர் சுரேஷ் ரெய்னா. சென்ற வருட ஐபிஎல் தொடரில் துபாயில் நடைபெற்ற போது இவரால் கலந்து கொண்டு விளையாட முடியவில்லை. துபாய்க்குச் சென்று விட்டு அங்கு ஒரு சில பிரச்சனைகள் காரணமாக மனக்கசப்பு ஏற்பட்டு இந்தியாவிற்கு திரும்பி விட்டார் சுரேஷ் ரெய்னா.

அதன் பின்னர் மீண்டும் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைவது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்தது. இதனை அந்த அணி நிர்வாகமும் சுரேஷ் ரெய்னாவும் மறுக்கவில்லை .இந்நிலையில் இந்த வருடம் மீண்டும் சென்னை அணியில் இணைந்து தனது வழக்கமான ஆட்டத்தை காட்டிக் கொண்டிருக்கிறார். பத்து வருடங்களுக்கு மேலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூணாக இருந்து சென்ற வருடம் இல்லாததால் சென்ற வருடம் தனது மிகப்பெரிய மாண்பை இழந்தது
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்கிறதோ? இல்லையோ? வருடாவருடம் பிளே ஆப் சுற்றுக்கு செல்வது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மாண்பாக இருந்து வந்தது. சென்ற வருடம் சுரேஷ் ரெய்னா அணியில் இல்லாதது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் தனது தனது தாயகத்துக்கு திரும்பிவிட்டேன் என்றும், இந்த மஞ்சள் நிற உடையை அணிவது தான் தனது பெருமை என்றும் தெரிவித்திருக்கிறார் சுரேஷ் ரெய்னா. அவர் கூறுகையில்…

தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் இணைந்ததில் எனக்கு மாபெரும் மகிழ்ச்சி. அணியின் பல வீரர்கள் இருக்கும் போது நாம் நன்றாக விளையாடிக் கொடுப்பது நல்ல உணர்வை கொடுக்கிறது. இந்த மஞ்சல் நிற உடையை அணிவது எனக்கு பெருமையாக இருக்கிறது எனது வாழ்க்கை முழுவதும் இந்த உடையை அணிந்து அதை பெருமையாக நினைத்து இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் சுரேஷ் ரெய்னா.