ரீ எண்ட்ரீ கொடுக்கும் முக்கிய வீரர்... இந்திய அணியுடனான ஒருநாள் தொடருக்கான விண்டீஸ் அணி அறிவிப்பு !! 1

இந்திய அணியுடன் ஒருநாள் தொடருக்கான விண்டீஸ் அணியை, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடைபெறும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி, கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது, சீனியர் வீரர்கள் பலருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், ஷிகர் தவான் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை வழிநடத்த உள்ளார்.

ரீ எண்ட்ரீ கொடுக்கும் முக்கிய வீரர்... இந்திய அணியுடனான ஒருநாள் தொடருக்கான விண்டீஸ் அணி அறிவிப்பு !! 2

ஒருநாள் தொடரின் முதல் போட்டி 22ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஒருநாள் தொடருக்கான விண்டீஸ் அணியை, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஒருநாள் தொடருக்கான 13 வீரர்கள் கொண்ட விண்டீஸ் அணியை நிக்கோலஸ் பூரண் வழிநடத்துகிறார். சாய் ஹோப் துணை கேப்டனாக செயல்பட உள்ளார். இந்த தொடருக்கான விண்டீஸ் அணியில் ஜேசன் ஹோல்டருக்கு மீண்டும் இடம் கிடைத்துள்ளது. இது தவிர அகெல் ஹூசைன், அல்ஜாரி ஜோசப், பிராண்டன் கிங், கைய்ல் மெயர்ஸ், ரோவ்மன் பவுல் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ரீ எண்ட்ரீ கொடுக்கும் முக்கிய வீரர்... இந்திய அணியுடனான ஒருநாள் தொடருக்கான விண்டீஸ் அணி அறிவிப்பு !! 3

ஒருநாள் தொடருக்கான விண்டீஸ் அணி;

நிக்கோலஸ் பூரன், ஷாய் ஹோப், சம்ராஹ் ப்ரூக்ஸ், கியாசி கார்டி, ஜேசன் ஹோல்டர், அகெல் ஹூசைன், அல்ஜாரி ஜோசப், பிராண்டன் கிங், கெய்ல் மேயர்ஸ், குடகேஷ் மோதி, கீமோ பவுல், ரோவ்மன் பவல், ஜெய்டன் செல்ஸ்.

ரிசர்வ் வீரர்கள்

ரோமோரியா ஷெப்பர்ட், ஹைடன் வால்ஸ் ஜூனியர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *