“BLACK LIVES MATTER” என்ற வாசத்துடன் களமிறங்கும் விண்டீஸ் அணி; வியப்பில் கிரிக்கெட் உலகம்
இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரின் போது “BLACK LIVES MATTER” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட லோகோவுடன் விண்டீஸ் அணி களமிறங்க உள்ளது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனாவின் கோர தாண்டவத்திற்கு மத்தியிலும் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விண்டீஸ் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
இதற்கிடையில் அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பினத்தவரை போலீசார் கொடூரமாக கொன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. அமெரிக்காவில் இன்னும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இனவெறி விளையாட்டிலும் உள்ளது என்று வீரர்கள் குற்றம்சாட்டினர். கொரோனா வைரஸ் தொற்றுக்குப்பின் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்றது. அப்போது கால்பந்து வீரர்கள் முழங்காலை தரையில் ஊன்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
West Indies players will wear the Black Lives Matter logo on their jerseys in the upcoming #ENGvWI Test series ? pic.twitter.com/mjBTbMagX4
— ICC (@ICC) June 29, 2020
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது டி-சர்ட்டில் ‘Black Lives Matter’ என்ற லோகாவை அணிந்து விளையாட இருக்கிறார்கள். இதற்கு ஐசிசி ஒப்புதல் வழங்கியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் கூறுகையில் ‘‘ஒற்றுமை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த உதவி செய்வது ஆகியவை எங்களது கடமை என்று நாங்கள் நம்புகிறோம்’’ என்று தெரிவித்திருந்தார்.