விண்டீஸ் அணியில் இவர் மிகவும் மோசமானவர்.. பார்த்து இருக்க வேண்டும் - மும்பை வீரரின் உண்மை முகத்தை உடைத்த ரோகித் 1

விண்டீஸ் அணியின் கேப்டனும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரருமான பொல்லார்ட் குறித்து சில தகவல்களை தெரிவித்துள்ளார் துவக்க வீரர் ரோகித் சர்மா.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் கட்டமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆடி வருகிறது. முதல் போட்டியை இந்திய அணி அபாரமாக சேஸ் செய்து வெற்றி பெற்றது.

விண்டீஸ் அணியில் இவர் மிகவும் மோசமானவர்.. பார்த்து இருக்க வேண்டும் - மும்பை வீரரின் உண்மை முகத்தை உடைத்த ரோகித் 2

அடுத்ததாக, திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணியை துவம்சம் செய்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வென்று தொடரை சமன் செய்தது.

இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற இருக்கிறது. தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இரு அணிகளும் களம் இறங்குவதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில், பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட துவக்க வீரர் ரோகித் சர்மா, விண்டீஸ் அணியின் கேப்டனாக அவதாரமெடுத்துள்ள பொல்லார்ட் கேப்டன்ஷிப் மற்றும் அதிரடி ஆட்டம் குறித்து பேசியுள்ளார்.

ரோகித் சார்மா கூறியதாவது:

விண்டீஸ் அணியில் இவர் மிகவும் மோசமானவர்.. பார்த்து இருக்க வேண்டும் - மும்பை வீரரின் உண்மை முகத்தை உடைத்த ரோகித் 3

“20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு இன்னும் நீண்ட நாட்கள் இருக்கிறது. அதற்கான இந்திய அணியை பலப்படுத்த முயற்சித்து வருகிறோம். தற்போது அதைவிட வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை வெல்வதே முக்கியமாகும்.

தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெறுவதன் மூலம் உலக கோப்பைக்கு அதிக நம்பிக்கை ஏற்படும். ஒவ்வொரு போட்டியில் ஏற்படும் தவறுகளில் இருந்து நாங்கள் பாடம் கற்று வருகிறோம்.

பொல்லார்ட் தலைமையில் வெஸ்ட்இண்டீஸ் அணி முற்றிலும் மாறுபட்ட அணியாக திகழ்கிறது. அந்த அணியில் சிறந்த அதிரடி ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள்.

விண்டீஸ் அணியில் இவர் மிகவும் மோசமானவர்.. பார்த்து இருக்க வேண்டும் - மும்பை வீரரின் உண்மை முகத்தை உடைத்த ரோகித் 4

ஐ.பி.எல். போட்டியில் நாங்கள் இருவரும் ஒரே அணியில் விளையாடி இருக்கிறோம். அவரை பற்றி எனக்கு நன்றாக தெரியும். கிரிக்கெட் பற்றி அதிக நுணுக்கங்களை அறிந்தவர் பொல்லார்ட் புத்திசாலித்தனமான வீரர் மட்டுமல்ல. சிறந்த கேப்டனும் ஆவார்” என ரோகித் கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *