வெற்றியின் விளிம்பில் நியூசிலாந்து ! போராடாமல் தோற்றே போகும் வெஸ்ட் இண்டீஸ் அணி !
வெஸ்ட் இண்டீஸ் அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதற்கு முன்னர் நடைபெற்ற டி20 தொடரில் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டி தற்போது பிரிட்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.
முதலில் பந்து வீச தீர்மானித்து தனக்குத்தானே கட்டிக் கொண்டது வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அபாரமாக விளையாடியது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 102 பந்துகளில் 151 ரன்கள் குவித்தார். தன்னந்தனியாக அந்த அணியை கிட்டத்தட்ட வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றுவிட்டார் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவெடுக்கும் முன்னர் 519 ரன்கள் எடுத்து டிஸ்லர் செய்தது.

இதனை அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 138 ரன்களுக்கு தனது விக்கெட்களை இழந்து பரிதாபமான நிலைக்கு சென்றது. இதன் மூலம் நியூசிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை ஃபாலோ செய்யச் சொல்லி பழித்தது.
தற்போது இரண்டாவது இன்னிங்சை வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடி வருகிறது தற்போதுவரை 196 ரன்கள் எடுத்து மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. எப்படி பார்த்தாலும் நாளை காலையில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் ஆக்ரோஷமாக பந்து வீசுவார்கள்.
முதல் 15 ஓவர்கள் மீதமுள்ள 4 விக்கெட்டுகளும் விழுந்துவிடும் என்று தெரிகிறது. அப்படி விழுந்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னிங்ஸ் தோல்வி அடையும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வி அடைந்தால் போராடாமல் தோல்வி அடைந்ததாக கருதப்படும்.
