வெஸ்ட் இண்டீஸ் இந்தியா 2017 : 4வது போட்டியில் தோல்விக்கு காரணம் தோனி இல்லை : சுனில் கவாஸ்கர்

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணி மோதிய 4வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி படு தோல்வி அடைந்தது இந்த தோல்விக்கு காரணம் தோனி தன என்று சிலர் கூறிவருகிறார்கள் ஆனால் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் தோனி இல்லை என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் இத்தியாசத்தில் அணைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது.

இந்திய அணியின் தோல்வி குறித்து சுனில் கவாஸ்கர் :

” தோனி இந்திய அணிக்காக பல போட்டிகளில் தனி ஆளாக கடைசி வரை அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்து இருக்கிறார் அதனை நாம் யாரும் மறக்க கூடாது. ஆனால் 4வது ஒரு நாள் போட்டியில் இந்திய தோல்வி அடைந்ததும் நீங்கள் அனைவரும் தோனியை சுட்டிகாட்டி கொண்டு இருக்கிறீர்கள் இது மிகவும் தவறு”

” தோனியை நீங்கள் குறை கூறினால்,அப்போது நீங்கள் அனைவரும் மற்ற வீரர்களையும் குறைகூற வேண்டும் ஏன் என்றால் அந்த போட்டியில் மற்ற வீரர்கள் யாரும் சரியாக விளையாடவில்லை, அந்த போட்டியில் தோனியும் மற்ற வீரர்களை போல மோசமாக விளையாடி இருந்தால் இந்திய அணி 105 அல்லது 110 ரன்களில் அணைத்து விக்கெட்களையும் இழந்து மிகவும் மோசகமாக தோல்வி அடைந்து இருக்கும். எனவே நீங்கள் தோனியை பற்றி குறை கூறுவதை நிறுத்த வேண்டும்.” என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடந்து முடிந்த 4வது ஒருநாள் போட்டியில் தோனி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்று கொண்டு இருந்தார் அப்போது எதிர்பாராத விதமாக தோனி அந்த போட்டியில் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி மோசமாக தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் தோனி 114 பந்துகளில் 54 ரன்கள் அடித்தார், இதில் அவர் 108 பந்துகளில் தான் அரைசதம் அடித்தார். அதிக பந்துகளில் அரை சதம் அடித்ததில் இதுவே தோனிக்கு முதல் முறையாகும்.

ஆட்டத்தின் விவரம் :

அந்த அணியின் தொடக்க வீரர்கள் சற்று நிலைத்து சீரான ரன்களை குவித்தனர். ஆனால் இந்த நிலையான ஆட்டம் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்களை மட்டுமே மேற்கிந்திய தீவுகள் அணி எடுத்தது.

190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி அடுத்து ஆடியது. இந்திய வீரர்கள் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. தவான் 5 ரன்களிலும் கோஹ்லி 3 ரன்களிலும் அவுட் ஆகினர். 47 ரன்கள் எடுப்பதற்குள் இந்திய அணி 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

டோணி சற்று பொறுப்பாக விளையாடி அரைசதம் கடந்த நிலையில் அவுட் ஆனார். இந்திய அணி 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மேற்கிந்திய தீவுகள் அணியின் ஹோல்டர் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை அள்ளி அசத்தினார்.
இத்தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

Vignesh N: Cricket Lover | Movie Lover | love to write articles

This website uses cookies.