4வது போட்டியில் இந்திய அணியில் மாற்றம் வர வாய்ப்பு

கதை என்ன?

தற்போது வெஸ்ட் இண்டீசுக்கு சென்று 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த தொடரில் மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 கணக்கில் இந்த தொடரில் முன்னிலையில் உள்ளது. அடுத்த போட்டி ஜூன் 2ஆம் தேதி விளையாடவுள்ளது. இந்நிலையில், 4வது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியில் மாற்றம் வரும் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

ஒருவேளை உங்களுக்கு தெரியவில்லை என்றால்…

3வது ஒரு நாள் போட்டி ஆண்டிகுவாவில் நடைபெற்றது. தொடக்கத்தில் தடுமாறிய இந்திய அணி ரகானே, டோணி, கேதர் ஜாதவின் பொறுப்பான ஆட்டத்தால் 251 ரன்களை குவித்தது. 72 ரன்கள் எடுத்து ரகானே ஆட்டமிழந்தார். 112 பந்துகளில் நான்கு பவுண்டரி ஒரு சிக்சர் உதவியுடன் இந்த ரன்களை அவர் குவித்தார்.

ரஹானே பெவிலியன் சென்றதற்கு பின் ஜாதவுடன் ஜோடி சேர்ந்த தோனி வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தார். 40வது முடிந்த பிறகு இருவரும் அதிரடியை காட்டினர். 230 கூட இந்தியா அடிக்காது என்ற நினைத்த போது, இந்த ஜோடி கடைசி 10 ஓவரில் 100 ரன் அடித்து 50 ஓவர் முடிவில் 251 ரன் சேர்த்தது.

இந்த போட்டியில் அசத்தலாக விளையாடிய இந்திய அணியின் அதிரடி நட்சத்திர வீரர் தோனி 79 பந்துகளில் 78 ரன் சேர்த்தார்.

விவரங்கள்:

தற்போது இந்த தொடரை 2 – 0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருக்குறது. முதல் மூன்று போட்டிகளில் எந்த பெரிய மாற்றமும் இந்திய அணி செய்யவில்லை. இதனால், 4வது ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்த தொடரில் வாய்ப்பில்லாமல் பல நல்ல வீரர்கள் சும்மா தான் இருக்கிறார்கள். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, இந்திய அணியில் விளையாட வாய்ப்பில்லாமல் இருக்கிறார். இதனால், நட்சத்திர பந்துவீச்சாளரான புவனேஸ்வர் குமார், இந்த போட்டியில் முகமது ஷமிக்கு வழி விடுவார் என எதிர்பார்க்க படுகிறது.

இன்னொரு மாற்றம் ரிஷப் பண்டாக தான் இருக்கும். உள்ளூர் மற்றும் ஐபில் போட்டிகளில் கலக்கி கொண்டிருக்கும் ரிஷப் பண்ட், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஒரு முறை கூட விளையாட வாய்ப்பளிக்கவில்லை. இதனால், இந்த போட்டியில் அவர் களமிறங்க வாய்ப்பு உள்ளது.

அடுத்தது என்ன?

நாம் எதிர்பார்ப்பது தான் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் நினைத்து கொண்டிருக்கிறார். 4வது போட்டியில் இந்திய அணியில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என விராட் கோலி கூறுகிறார்.

மூன்றாவது ஒருநாள் போட்டி முடிந்த பிறகு,”அடுத்த போட்டியில் மாற்றங்கள் ஏற்படும். சில வீரர்கள் கடந்த சில போட்டிகளில் விளையாடவில்லை. தொடக்கத்தில் பிட்சில் ஈரத்தன்மை இருந்தது. அவர்கள் நன்றாக பந்து வீசினார்கள்,” என விராட் கோலி கூறினார்.

“இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் நன்றாக விழுந்தது. எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். சரியான சமயத்தில் கை ஓங்குவது தான் புத்திசாலிதனம்,” என மேலும் கேப்டன் கோலி கூறினார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.