தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சென்று 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனை அடுத்து, இரண்டு அணிகளும் ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாட உள்ளன.ஒருநாள் தொடரை வென்றதால், இந்த டி20 தொடரையும் இந்திய அணி கைப்பற்ற நினைக்கும்.
கடைசியாக இரு அணிகளும் மோதிய போது இரு அணியும் சேர்ந்து 40 ஓவருக்கு 480 ரன்னுக்கு மேல் அடித்தார்கள். அந்த போட்டியில் இந்திய அணியின் லோகேஷ் ராகுல் சதம் அடித்தார், ஆனாலும் இந்திய அணி தோல்வியையே சந்தித்தது.
ஒருநாள் போட்டிகளில் விளையாடவதர்கள், இந்த டி20 போட்டியில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு முன்னதாக கடைசியாக ஒருமுறை யுவராஜ் சிங் மற்றும் மகேந்திர சிங் தோனி விளையாடவுள்ளனர்.
வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான ஒரே ஒரு டி20 போட்டியில் எதிர்பார்க்கும் இந்திய அணியை பாருங்கள்:
அஜிங்க்யா ரஹானே
ஷிகர் தவான்
விராட் கோலி
மகேந்திர சிங் தோனி
ரிஷப் பண்ட்
கேதார் ஜாதவ்
ஹர்டிக் பாண்டியா
ரவிச்சந்திரன் அஸ்வின்
குல்தீப் யாதவ்
புவனேஸ்வர் குமார்