ரொம்ப பாவம்... அந்த பையன் அப்படி என்ன தப்பு பண்ணிட்டான்...? இந்திய அணி மீது முன்னாள் வீரர் கோவம் !! 1

இந்தியாவின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பத்திரிக்கையாளர் சந்திப்பின் பொழுது இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் இளம்வீரர் ஹனுமா விஹாரிக்கு ஏன் வாய்ப்பளிக்க வில்லை என்று இந்திய அணி தேர்வாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹைதராபாத் மாநிலத்தை சேர்ந்த 28 வயதாகும் விஹாரி கடந்த 2018ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார், இதுவரை 12 டெஸ்ட் தொடரில் விளையாடிய விகாரி 624 ரன்கள் அடித்துள்ளார். குறிப்பாக பிரிஸ்பன் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இக்கட்டான நிலையில் இந்தியா அணி தத்தளித்த போது 161 பந்துகளில் 23ரன்கள் அடித்து இந்திய அணி அந்த போட்டியை டிரா செய்வதற்கு மிகவும் உதவியாக இருந்தார்.

ரொம்ப பாவம்... அந்த பையன் அப்படி என்ன தப்பு பண்ணிட்டான்...? இந்திய அணி மீது முன்னாள் வீரர் கோவம் !! 2

இவருடைய இந்த மிகச்சிறந்த பங்களிப்பின் மூலம் கிரிக்கெட் வட்டாரங்களில் பேசு பொருளாக திகழ்ந்தார்,மேலும் எதிர்கால இந்திய அணியின் டெஸ்ட் தொடர்களில் விஹாரி முக்கிய பங்காற்றுவார் என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்திருந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர் தேர்வு செய்யப்படாமல் சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்திய A அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார்.

மிக சிறந்த முறையில் விளையாடி வரும் விஹாரிக்கு ஏன் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பளிக்காமல் இந்திய அணித் தேர்வாளர்கள் குழு புறக்கணித்துள்ளது என்ற கேள்வி தற்போது கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ரொம்ப பாவம்... அந்த பையன் அப்படி என்ன தப்பு பண்ணிட்டான்...? இந்திய அணி மீது முன்னாள் வீரர் கோவம் !! 3

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் பொழுது ஹனுமா விஹாரிக்கு இந்திய அணித் தேர்வாளர்கள் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பளிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில் பேசிய அவர், விஹாரி மிகவும் பாவம் அவர் மிக சிறந்த முறையில் விளையாடி வருகிறார், அவர் இந்திய அணிக்கு அறிமுகமான நாள் முதல் இன்றுவரை மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார், இருந்தபோதும் இந்திய அணித் தேர்வாளர்கள் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரைத் தேர்ந்தெடுக்காதது ஏன் என்று தெரியவில்லை, இவரைப்போன்ற ஒரு வீரருக்கு சொந்த மைதானத்தில் வாய்ப்பளிக்காமல் சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்திய ஏ அணியில் வாய்ப்பளித்துள்ளது வருத்தமளிக்கிறது.

இவருக்கு வாய்ப்பளிக்காமல் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி புதிய வீரர்களுக்கெல்லாம் வாய்ப்பளித்துள்ளது, ஏன் இவ்வாறு இந்திய அணி செய்கிறது என்று மக்கள் மத்தியில் தற்போது சந்தேகம் ஏற்பட்டுவிட்டது.,

டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக விளையாடும் விஹாரி என்ன தவறு செய்தார் என்று விஹாரிக்கு ஆதரவாக அஜய் ஜடேஜா பேசியுள்ளார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *