முதல்ல உங்க கண்ண போய் டாக்டர்ட காட்டுங்க; சாகிப் அல் ஹசனை பங்கமாய் கலாய்த்த சுனில் கவாஸ்கர் !! 1
சாகிப் அல் ஹசன் முதலில் தன்னுடைய கண்ணை பரிசோதனை செய்ய வேண்டும் ; பங்கமாய் கலாய்த்த சுனில் கவாஸ்கர் ..

வங்கதேச அணியின் கேப்டன் சாகிப் அல் ஹசன் முதலில் தன்னுடைய கண்ணை பரிசோதனை செய்ய வேண்டும் என சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

வங்கதேச சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது இதில் ஒரு நாள் தொடரில் இந்திய அணி யாரும் எதிர்பாராத விதத்தில் 2-1 என வங்கதேச அணியிடம் பரிதாபமாக தோல்வியை தழுவியது.

முதல்ல உங்க கண்ண போய் டாக்டர்ட காட்டுங்க; சாகிப் அல் ஹசனை பங்கமாய் கலாய்த்த சுனில் கவாஸ்கர் !! 2

இதனால் வெற்றியில் குதித்த வங்கதேச வீரர்கள் எப்படி ஒரு நாள் தொடரில் இந்திய அணியை மண்ணை கவ்வ வைத்தோமோ.. அதேபோன்று டெஸ்ட் தொடரிலும் இந்திய அணியை மண்ணை கவ்வ வைப்போம் என சவால் விட்டிருந்தனர்.

இந்த நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை எதிர்கொண்ட இந்திய அணி வீரர்கள், டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸ்லிருந்தே வங்கதேச வீரர்களை அடித்து துவம்சம் செய்தனர்.

முதல்ல உங்க கண்ண போய் டாக்டர்ட காட்டுங்க; சாகிப் அல் ஹசனை பங்கமாய் கலாய்த்த சுனில் கவாஸ்கர் !! 3

பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்திய இந்திய வீரர்கள் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வெற்றி பெற்று 2-0 என தொடரை கைபற்றி வங்கதேச வீரர்களுக்கு தக்க பதிலடி கொடுத்திருந்தனர்.

இதனால் வெற்றி பெற்ற இந்திய வீரர்கள் குறித்தும், வாய் பேசி தோல்வியை சந்தித்த வங்கதேச வீரர்கள் குறித்தும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சாகிப் அல் ஹசன்

அந்த வகையில் இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் தேவையில்லாத ஷாட் அடிக்க முயற்சி செய்து தன்னுடைய விக்கெட்டை மோசமாக இழந்த வங்கதேச அணியின் கேப்டன் சாகிப் அல் ஹசன், நல்ல கண் மருத்துவரை போய் பார்க்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் விமர்சித்து பேசியுள்ளார்.

முதல்ல உங்க கண்ண போய் டாக்டர்ட காட்டுங்க; சாகிப் அல் ஹசனை பங்கமாய் கலாய்த்த சுனில் கவாஸ்கர் !! 4

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில், “சாகிப் அல் ஹசனுக்கு என்ன வயதாகிறது..? அவர் முதலில் தன்னுடைய கண்ணை பரிசோதனை செய்ய வேண்டும், அவர் சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது,ஆனால் அவர் இந்த தொடரில் இரண்டு முறை அவுட்டான விதம் அப்படி நம்மை சிந்திக்க வைக்கிறது, ஒரு மரியாதை குறைவாக சொல்லவில்லை எனவே என்னை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம், அந்த பந்து அடிக்க தேவை இல்லாத ஒன்றாக, பந்து மெதுவாக வீசப்பட்டது கிடையாது, அது நல்ல வேகத்தில் வந்த பந்து” என அறிவுரையையுடன் கூடிய விமர்சனத்தை சுனில் கவாஸ்கர் தெரிவித்திருந்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *