வங்கதேசம் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 150 ரன்கள் கடந்த விராட் கோலி கூறியது இதுதான்.
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய மயங்க் அகர்வால், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கும் அரை சதங்களுக்கும் வெளியேறியபோது, மறுமுனையில் நிலைத்து ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டு, தனது சதத்தை பூர்த்தி செய்தார்.
அதன்பிறகு 150 ரன்கள் அடித்து விட்டு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை நோக்கி கைகளை உயர்த்தி காட்டினார் அகர்வால். அப்போது டிரஸ்ஸிங் ரூமில் இருந்து இரட்டை சதம் அடித்து விடு என கையை காட்டினார் விராட் கோலி.
மேலும் இரட்டை சதம் அடித்த பிறகு கையை காட்டிய அகர்வாலிடம், முச்சதம் அடித்து விட்டு வா என விராட் கோலி கூறினார். ஆனால் துரதிஷ்டவசமாக 243 ரன்களுக்கு அகர்வால் ஆட்டமிழந்து வெளியேறினார்.
டெஸ்ட் போட்டியை பார்க்கையில்,
டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தொடங்கிய வங்கதேச அணி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க இயலாமல் மிகவும் திணறியது. இறுதியாக 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு புஜாரா 54 ரன்கள், ரகானே 86 ரன்களும் அடித்தனர். மயன்க் அகர்வால் 243 ரன்கள் குவித்தார். இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் வங்கதேச அணியை விட இந்தியா 343 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.
களத்தில் மற்றும் உமேஷ் யாதவ் இருவரும் இருக்கின்றனர்.
வீடியோ:
Virat Kohli to Mayank Agarwal
Virat: Go for 2️⃣0️⃣0️⃣
Mayank: ?? #INDvBAN
— Arjun ? (@7NALDO_) November 15, 2019