ரோஹித் சர்மா மீது செம கடுப்பில் இருந்த தினேஷ் கார்த்திக் !! 1
ரோஹித் சர்மா மீது செம கடுப்பில் இருந்த தினேஷ் கார்த்திக்

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இலங்கை சென்றிருந்த இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுடனான முத்தரப்பு டி.20 தொடரில் பங்கேற்றது.

இந்த தொடரில் வங்கதேச அணியுடனான இறுதி போட்டியில் இந்திய அணி பேட்ஸ்மேன்களில் சொதப்பல் ஆட்டத்தால் கடைசி கட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்ட நிலையில் அணியின் ஏழாவது வீரராக களமிறங்கிய தினேஷ் கார்த்திக் வெறும் 9 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார். நீண்ட காலமாக இந்திய அணியில் தொடர்ந்து புறக்கணிப்பட்டு வரும் தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் வாழ்க்கையில் இந்த அதிரடி ஆட்டத்திற்கு பிறகு பெரும் மாற்றம் ஏற்பட்டது.

ரோஹித் சர்மா மீது செம கடுப்பில் இருந்த தினேஷ் கார்த்திக் !! 2

இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக்தின் அதிரடி ஆட்டத்தையும், குறிப்பாக கடைசி ஒரு பந்திற்கு 5 ரன்கள் தேவை என்ற நிலையில் தினேஷ் கார்த்திக் அசால்டாக சிக்ஸரையும் நாம் மறந்திருக்க மாட்டோம்.

தினேஷ் கார்த்திக் தற்போது ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் அணியில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இடம்பெற்றுள்ள நிலையில், தினேஷ் கார்த்திக்கை ஹீரோவாக்கிய முத்தரப்பு தொடரின் இறுதி போட்டியில் நடைபெற்ற சில விசயங்களை இங்கு பார்போம்.

ரோஹித் சர்மா மீது செம கடுப்பில் இருந்த தினேஷ் கார்த்திக் !! 3

கம்மியான இலக்கை துரத்திய இந்திய அணிக்கு மிடில் ஆர்டர் சரியாக அமையாததால் இந்திய அணி அந்த போட்டியில் நிச்சயம் தோல்வியடையும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். போதாக்குறைக்கு அணியின் ஐந்தாவது வீரராக தினேஷ் கார்த்திக் களமிறக்கப்படாமல் இளம் வீரரான விஜய் சங்கர் களமிறக்கப்பட்டார். களமிறங்கிய விஜய் சங்கரும் வங்கதேசத்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியதன் காரணமாக இந்திய அணி கடைசி கட்டத்தில் தடுமாறியது.

கடைசி இரண்டு ஓவரில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் வெறும் 8 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தாலும், தன்னை முன்னதாக களமிறக்காத கேப்டன் ரோஹித் சர்மா மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

ரோஹித் சர்மா மீது செம கடுப்பில் இருந்த தினேஷ் கார்த்திக் !! 4

இது குறித்து பேசிய ரோஹித் சர்மா, “ஐந்தாவது வீரராக நான் விஜய் சங்கரை களமிறக்கியதால் தினேஷ் கார்த்திக் என் மீது கடும் கோபத்தில் இருந்தார். நான் டிரசிங் ரூமிற்கு சென்றவுடன் என்னை நோக்கி ஆவேசமாக கத்தினார். நீங்கள் கடைசி  ஓவர்களில் களமிறங்குவதே சரியாகவே இருக்கும் என்று நான் கூறிய பின்பும் தினேஷ் கார்த்திக்கின் கோபம் குறையாததால் நான் டிரசிங் ரூமை விட்டு வெளியேறிவிட்டேன். ஆனால் எனது முடிவு சரியானது தான் என்று தினேஷ் கார்த்திக் பின்னர் புரிந்திருப்பார் என்று நினைக்கிறேன்” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *