ஐ.பி.எல் டி.20 தொடர் நடக்குமா..? புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கங்குலி !! 1

ஐ.பி.எல் டி.20 தொடர் நடக்குமா..? புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கங்குலி

இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தாண்டு கடந்த மார்ச் 29 ஆம் தேதி துவங்குவதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இதற்கிடையில், தற்போது வரை நிலைமை சரியாகாத காரணத்தால், ஐபிஎல் தொடர் குறித்து முக்கிய முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிவேகமாக பரவி வரும் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதற்கிடையில் ஐபிஎல் தொடர் துவங்குவது குறித்து எவ்வித உறுதியும் அளிக்க முடியாது என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் டி.20 தொடர் நடக்குமா..? புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கங்குலி !! 2

இதுகுறித்து கங்குலி கூறுகையில், “ஒவ்வொரு நடவடிக்கையும் கூர்மையாக கண்கானித்து வருகிறோம். தற்போதைய நிலையில் எதையும் உறுதியாக சொல்ல முடியாது. சொல்வதற்கு என்ன உ ள்ளது? விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். யாரும் எங்கேயும் செல்ல முடியாது.

மே மாதத்தின் மத்தி வரை இது எப்படி செல்லும் என்பது குறித்தும் தெரியவில்லை. எங்கிருந்து வீரர்கள் வருவார்கள், அவர்கள் எப்படி பயணம் செய்வார்கள். இது போன்ற விஷயங்கள் எல்லாம் நாம் எளிதாக புரிந்து கொள்ள முடியும். ஐபிஎல் தொடரை மறந்துவிடுங்கள் உலகில் எந்த விளையாட்டுக்கும் சாதகமான நேரம் இதுவல்ல.

ஐ.பி.எல் டி.20 தொடர் நடக்குமா..? புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கங்குலி !! 3

நாளை (ஏப்ரல் 13) பிசிசிஐ அதிகாரிகளுடன் கலந்து பேசிய பின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் குறித்த தகவலை வழங்குகிறேன். ஆனால் யதார்த்தமாக பேச வேண்டும் என்றால் உலகில் உயிருக்கே அச்சுறுத்தல் உள்ள போது விளையாட்டுக்கு ஏது எதிர்காலம்” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *