மோசமான ஃபார்மில் இருந்த நான்... இப்படி தான் என்னோட பெஸ்ட் ஃபார்மை கொண்டு வந்தேன் - ஆட்டநாயகன் விராட் கோலி மாஸ் பேச்சு! 1

எதிரணி பவுலர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றால், அந்த சமயத்தில் நான் இப்படித்தான் செய்வேன். அதனை செய்துதான் என்னுடைய பழைய பார்மை கொண்டு வந்தேன் என பேசியுள்ளார் ஆட்டநாயகன் விராட் கோலி.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில் ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்தது. விராட் கோலி கொடுத்த துவக்கத்தை பார்த்தால் ஆர்சிபி அணி எளிதாக 200 ரன்கள் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த உடனேயே விராட் கோலி ஆட்டம் இழந்தார்.

மோசமான ஃபார்மில் இருந்த நான்... இப்படி தான் என்னோட பெஸ்ட் ஃபார்மை கொண்டு வந்தேன் - ஆட்டநாயகன் விராட் கோலி மாஸ் பேச்சு! 2

அதன் பிறகு வந்த வீரர்கள் எவரும் 30 ரன்களை கடக்கவில்லை என்பதால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் மட்டுமே அடித்தது.

அதன் பிறகு பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், பவர்-பிளே ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து, 32 ரன்கள் மட்டுமே டெல்லி அணியால் அடிக்க முடிந்தது.

மோசமான ஃபார்மில் இருந்த நான்... இப்படி தான் என்னோட பெஸ்ட் ஃபார்மை கொண்டு வந்தேன் - ஆட்டநாயகன் விராட் கோலி மாஸ் பேச்சு! 3

இதனால் டெல்லி அணியினர் பெரிய அழுத்தத்திற்கு உள்ளாகி, அடுத்து வந்த வீரர்களும் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர். மனிஷ் பாண்டே மட்டுமே மிகச் சிறப்பாக விளையாடிக் கொடுத்து அரைசதம் அடைத்தார்.

அதன் பிறகு அவரையும் ஆர்சிபி பவுலர்கள் நீடிக்க விடவில்லை.  20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 151 ரன்கள் மட்டுமே அடித்து 9 விக்கெட்டுகளை இழந்தது. இதன் மூலம் ஆர்சிபி அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மோசமான ஃபார்மில் இருந்த நான்... இப்படி தான் என்னோட பெஸ்ட் ஃபார்மை கொண்டு வந்தேன் - ஆட்டநாயகன் விராட் கோலி மாஸ் பேச்சு! 4

பேட்டிங்கில் அரைசதம், ஃபீல்டிங்கில் இரண்டு கேட்ச்கள்  என சிறப்பாக செயல்பட்ட விராட் கோலி-க்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது. அப்போது பேசிய விராட் கோலி,

“நான் டாஸ் பந்தில் ஆட்டம் இழந்தது சற்று ஏமாற்றமாக இருக்கிறது. மிகச்சிறப்பாக விளையாடி வந்தேன். அரைசதம் அடித்த பிறகு, அடுத்த 10 பந்துகளில் 30-35 ரன்கள் அடித்து, 200 ரன்களை கடக்க உதவலாம் என்று நினைத்திருந்தேன். தவறாக முடிந்துவிட்டது.

மோசமான ஃபார்மில் இருந்த நான்... இப்படி தான் என்னோட பெஸ்ட் ஃபார்மை கொண்டு வந்தேன் - ஆட்டநாயகன் விராட் கோலி மாஸ் பேச்சு! 5

பின்னர் ட்ரெஸ்ஸிங் ரூமில் அனைவரிடமும் பேசியபோது 175 ரன்கள் இந்த மைதானத்தில் போதும். ஸ்பின்னர்கள் உள்ளே வந்தால் பந்து சற்று திரும்புகிறது மெதுவாகவும் வருகிறது. அதை வைத்து கட்டுப்படுத்த முடியும் என்று பேசினேன்.

நான் என்னுடைய சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தும்போதெல்லாம் பவுலர்களின் சிறப்பான பந்தை அடித்து விளையாடி அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க நினைப்பேன். அப்படி செய்து எனக்குள் நானே ஆக்ரோஷத்தை கொண்டு வருவேன். பவுலர்கள் அழுத்தத்தில் இருக்கும்போது வேறுவிதமாக முயற்சிப்பார்கள். அந்த சமயத்தில் அவர்களது சிறந்த பந்து வராது. தவறு செய்ய நேரிடும். அதை பயன்படுத்தி இன்னும் ரன்கள் அடிக்கலாம். இப்படித்தான் என்னுடைய ஃபார்மை கொண்டு வந்தேன்.

கடந்த இரண்டு போட்டிகள் கடைசி நேரத்தில் கைநழுவிப்போனது பெருத்த ஏமாற்றமாக இருந்தது. ஆனாலும் நாங்கள் மனம் தளரவில்லை. நிறைய இளம் வீரர்கள் அணியில் இருக்கின்றனர். துடிப்புடன் செயல்படுகின்றனர். இன்று வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *