இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தனது ட்விட்டர் பக்கத்தில் விராட் கோலி குறித்து ஆதரவான கருத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை, விராட் கோலி இந்த போட்டியில் சதம் அடிப்பார் அந்த போட்டியில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் முடிந்து விட்டது. ஆனால் இன்றுவரை சதம் அடிக்கவில்லை.
தனது பேட்டிங்கில் உள்ள குறையை போக்க வேண்டும் என்பதற்காக கேப்டன் பதவியை உதறித் தள்ளிவிட்டு (pure batsmen) ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் களமிறங்கிய விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அனைவரது எதிர்பார்ப்பிலும் மண் அள்ளிப் போடும் வகையில் விராட் கோலி மிக மோசமாக செயல்பட்டார். இதில் முதல் போட்டியில் 8 ரன்களிலும் இரண்டாவது போட்டியில் 18 ரன்களில் தனது விக்கெட்டை இழந்த விராட்கோலி, மூன்றாவது போட்டியில் இன்னும் ஒருபடி கீழே போய் டக் அவுட் ஆனார்.
இந்த நிலையில் விராட் கோலியின் இந்த மோசமான பார்ம் குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் தனது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக விராட் கோலி சில காலம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் விளையாடினால் தன்னுடைய பழைய பார்மை மீட்டு எடுப்பதற்கு உதவியாக இருக்கும் என்றும் அறிவுரை வழங்குகின்றனர்.
ஆனால் சில கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வல்லுநர்கள் விராட் கோலி தனது பழைய பார்மை வெகுவிரைவில் வெளிப்படுத்துவார் என்று தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணி அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வர்ணனையாளர் ஆஷா போஸ்லே தனது ட்விட்டர் பக்கத்தில் விராட் கோலியின் நிலைமை குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், விராட் கோலி தற்போது சந்திக்கும் மோசமான நிலைமையை அனைத்து பேட்ஸ்மேன்களும் சந்தித்துள்ளனர். நிச்சயம் விராட் கோலி இதிலிருந்து ஒருநாள் மீண்டு வந்து அசத்துவார். மீண்டும் விராட் கோலியை பழைய ஃபார்மில் பார்ப்பதற்கு ஆவலாக உள்ளேன் என்று ஹர்ஷா போக்லே அதில் தெரிவித்திருந்தார்.
இதே போன்ற நிலைமை 2014 ஆம் ஆண்டு விராட்கோலி சந்தித்து, பின் மிகப்பெரிய கம்பேக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.