சுப்மன் கில் தப்பிச்சிட்டாரு... ஆனா இந்த இரண்டு பேரும் தப்பிக்க இனி வாய்ப்பே கிடையாது; பிரக்யான் ஓஜா உறுதி !! 1
சுப்மன் கில் தப்பிச்சிட்டாரு… ஆனா இந்த இரண்டு பேரும் தப்பிக்க இனி வாய்ப்பே கிடையாது; பிரக்யான் ஓஜா உறுதி

கே.எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் அணிக்கு திரும்பிவிட்டால் இந்திய அணியின் ஆடும் லெவனில் இருந்து புறக்கணிக்கப்பட வாய்ப்புள்ள வீரர்கள் குறித்தான தனது கருத்தை முன்னாள் இந்திய வீரரான பிரக்யான் ஓஜா ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது போட்டி 15ம் தேதி துவங்க உள்ளது.

சுப்மன் கில் தப்பிச்சிட்டாரு... ஆனா இந்த இரண்டு பேரும் தப்பிக்க இனி வாய்ப்பே கிடையாது; பிரக்யான் ஓஜா உறுதி !! 2

இரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும், கடந்த இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி பேட்டிங்கில் சற்று தடுமாறியே வருகிறது என்பதே உண்மை.

விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் இந்திய அணிக்கு திரும்பிவிட்டால், இந்திய அணியில் நிலவி வரும் பேட்டிங் பிரச்சனை சரியாகிவிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் அணிக்கு திரும்பிவிட்டால் ஆடும் லெவனில் இருந்து புறக்கணிக்கப்பட வாய்ப்புள்ள வீரர்கள் குறித்தான தனது கருத்தை முன்னாள்  இந்திய வீரரான பிரக்யான் ஓஜா ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

சுப்மன் கில் தப்பிச்சிட்டாரு... ஆனா இந்த இரண்டு பேரும் தப்பிக்க இனி வாய்ப்பே கிடையாது; பிரக்யான் ஓஜா உறுதி !! 3

இது குறித்து பிரக்யான் ஓஜா பேசுகையில், “ஸ்ரேயஸ் ஐயர் தனது பங்களிப்பை செய்ய தவறி வருகிறார். எனவே கே.எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பிவிட்டால் ஸ்ரேயஸ் ஐயருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்காது என்றே கருதுகிறேன். அதே போன்று ராஜத் படித்தரும் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்படுவார் என்றே கருதுகிறேன். கே.எல் ராகுல் நல்ல பார்மில் இருப்பதால் எவ்வித தடையும் இல்லாமல் அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கும். மிக முக்கியமான வீரர்கள் அணிக்கு திரும்பிவிட்டால் இது போன்று நடப்பது சாதரண விசயம் தான், இதை யாரும் குறை சொல்ல முடியாது” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *