தீபக் சாஹர்;
அடிக்கடி காயம் அடைந்தாலும், தனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி கொண்டு, இந்திய அணிக்கான தனது பங்களிப்பையும் சரியாக செய்து வரும் தீபக் சாஹர், விண்டீஸ் அணியுடனான ஒருநாள் தொடரில் நிச்சயம் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் பல வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த தீபக் சாஹர், விண்டீஸ் அணியுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் முகேஷ் குமாரை விட திறமையான அதே சமயம் அனுபவமிக்க சிறந்த பந்துவீச்சாளர் என்பதில் மாற்று கருத்து இல்லை.